இரவின் நிழல் படத்திற்கு பிறகு தற்போது இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் ‘டீன்ஸ்’ என்ற புதிய படத்தை இயக்கியுள்ளார். பெரிய ஹீரோக்கள் யாரும் இல்லாமல் குழந்தைகளை மையப்படுத்தி இந்த படத்தை இயக்கி இருக்கிறார்.
சமீப நாட்களுக்கு முன்பு வெளியான ‘டீன்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தான், முதன்முறையாக சென்சார் சான்றிதழுடன் வெளியான ஃபர்ஸ்ட் லுக் என்ற அந்தஸ்தை பெற்றது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஒரு பழைய கிணற்றில் இருக்கும் பேயை பற்றி ஒரு சிறுமி கதை சொல்வது போல தொடங்கும் டீசரில், திகிலான காட்சிகள் அதிகம் இடம்பெற்றிருக்கிறது.
டீசரில் எந்த கதாபாத்திரத்தின் முகத்தையும் காட்டாமல் சஸ்பென்ஸ் ஆகவே முடித்திருக்கிறார் இயக்குநர். குழந்தைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் என்று சொன்னவுடன் ஒரு ஜாலியான கலர் ஃபுல் படமாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் ‘டீன்ஸ்’ படத்தை ஒரு பக்கா ஹாரர் த்ரில்லர் கதை களத்தில் உருவாகி இருக்கிறார் இயக்குநர் பார்த்திபன். இந்த படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார்.
‘ஜிகர்தண்டா’, ‘அச்சம் என்பது மடமையடா’ போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கவாமிக் யூ ஆரி டீன்ஸ் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பயாஸ்கோப் USA நிறுவனம் மற்றும் அகிரா புரொடக்ஷன்ஸ் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த படத்தின் படத்தொகுப்பாளராக ஆர். சுதர்சன் பணியாற்றியுள்ளார்.
‘டீன்ஸ்’ திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. கூடிய விரைவில் இந்த படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
-கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
GOAT: பெரும் தொகைக்கு விலைபோன சாட்டிலைட் உரிமை… யாரு வாங்கிருக்காங்கன்னு பாருங்க!
”தோல்வி பயத்தில் சர்வாதிகாரத்தை மோடி கட்டவிழ்த்துள்ளார்” : ஸ்டாலின்
Thalapathy 69 : அரசியல் கதைக்காக ‘அஜித்’ இயக்குநருடன் கூட்டணி வைக்கும் விஜய்?