Aadujeevitham: பிரித்விராஜ் இப்படி எல்லாம் செஞ்சாரா?

சினிமா

பிரித்விராஜ் – அமலாபால் நடிப்பில் நேற்று (மார்ச் 28) வெளியான ‘ஆடுஜீவிதம்’ படம் ரசிகர்கள் மத்தியில், நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

உண்மை சம்பவத்தின் அடிப்படையில் நாவலாக எழுதப்பட்ட ‘ஆடுஜீவிதம்’ நாவலை அதே பெயரில் படமாக்கி ஈர்த்திருக்கிறார் இயக்குநர் பிளஸ்சி.

பிரித்விராஜின் நடிப்பிற்கும், ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்கும் நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் இப்படத்திற்காக பிரித்விராஜின் உடல்ரீதியான மெனக்கெடல்கள் தற்போது தெரியவந்துள்ளன. வெளிநாட்டிற்கு செல்லுமுன் பிரிதிவிராஜின் எடை 98 கிலோவாக இருக்கும். பாலைவனத்தில் கஷ்டப்படும் போது அவரது எடை 68 கிலோவாக காட்டப்படும்.

இதற்காக படக்குழுவினர் சிஜி முறையில் இந்த ட்ரான்ஸ்பர்மேஷனை காட்டியிருப்பார்கள் என பெரும்பாலோனோர் நினைத்திருப்பார்கள். ஆனால் உண்மையில் இந்த எடைக்குறைப்பை நாயகன் பிரித்விராஜ் மேற்கொண்டு இருக்கிறார்.

சுமார் 3௦ கிலோ உடல் எடையை குறைத்து இப்படத்தில் அவர் நடித்திருக்கிறார். இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன,

இதைப்பார்த்த ரசிகர்கள் ‘பிரித்விராஜின் இந்த கடின உழைப்பு நிச்சயம் அவருக்குரிய பலனைத்தரும். இதற்காக அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்,” என புகழ்ந்து வருகின்றனர்.

முதல்நாளில் மட்டும் இப்படம் உலகம் முழுவதும் ரூபாய் 15 கோடியை பாக்ஸ் ஆபீஸில் வசூல் செய்திருக்கிறது. படத்துக்கு நேர்மறையான விமர்சனங்கள் கிடைத்திருப்பதால், வரும் நாட்களில் இப்படம் பாக்ஸ் ஆபீஸில் மேலும் பல புதிய சாதனைகளை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மஞ்சுளா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சென்னை மதுபான விடுதி விபத்து: மேலாளர் கைது!

Gold Rate: ஒரே நாளில் ரூ.1,120 உயர்ந்த தங்கம்… சவரன் ரூ.51,000-க்கு விற்பனை!

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *