பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா போன்ற வெற்றி படங்களை தனது 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்தவர் தயாரிப்பாளர் கதிரேசன்.
அதன் பிறகு சில வருடங்களாக பட தயாரிப்பில் இருந்து விலகி இருந்த கதிரேசன், ராகவா லாரன்ஸை வைத்து ருத்ரன் என்ற படத்தை இயக்கி தயாரித்தார். அதனை தொடர்ந்து ஜிகர்தண்டா 2 படத்தை தயாரித்து மாபெரும் வெற்றி கண்டார்.
PONGAL WILL BE INCOMPLETE WITHOUT A MASSIVE ANNOUNCEMENT!
SO HERE WE GO!!!#5StarCreations is thrilled and proud to join with Actor @VishalKOfficial for our next project🔥
Stay tuned for more exciting updates
Wishing everyone a Happy Pongal🌾@kathiresan_offl @5starcreationss pic.twitter.com/y8COCXCMP3
— Five Star Creations LLP (@5starcreationss) January 15, 2024
தற்போது மீண்டும் முழு வீச்சில் படத்தயாரிப்பில் களம் இறங்கியுள்ள கதிரேசன், தொடர்ந்து முன்னணி நடிகர்களை வைத்து படம் தயாரிக்க பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் முதல் முறையாக நடிகர் விஷாலை வைத்து தனது 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஒரு புதிய படத்தை தயாரிக்க உள்ளதாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அறிவித்துள்ளார். இந்த படம் குறித்த மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
திருவள்ளுவரை வம்புக்கு இழுப்பதா? – ஆளுநருக்கு அமைச்சர் ரகுபதி கண்டனம்!
“நான் பயன்படுத்தியது ஒரிஜினல் பீடி கிடையாது” – மகேஷ் பாபு விளக்கம்!