‘பரியேறும் பெருமாள்’, ‘ரைட்டர்’, ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’, ‘ப்ளூ ஸ்டார்’, ‘ஜெ.பேபி’ படங்களுக்கு பிறகு பா.ரஞ்சித் தன்னுடைய நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கும், புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று (பிப்ரவரி 29) சென்னையில் தொடங்கியது.
இதில் நடிகரும், இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் கதாநாயகனாக நடிக்க அவருடன் இணைந்து ஷிவானி ராஜசேகர், பசுபதி, ஸ்ரீநாத்பாஸி, லிங்கேஷ், விஷ்வாந்த் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அகிரன் மோசஸ் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். கதாநாயகனாக நடிப்பதோடு மட்டுமின்றி படத்திற்கு இசையமைப்பாளராகவும், ஜிவி பிரகாஷ் பணியாற்றவுள்ளார்.
இயக்குநர் பா.ரஞ்சித் தன்னுடன் பணியாற்றிய உதவி இயக்குநர்களுக்காக, தொடர்ந்து படத்தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோடிக்கு தோல்வி பயம்: ஸ்டாலின் தாக்கு!
சீனா கொடி சர்ச்சை : அனிதா ராதா கிருஷ்ணன் பதில்!