AK64: பிரமாண்ட நிறுவனத்துடன் கைகோர்த்த அஜித்?

Published On:

| By Manjula

AK 64 ajith join with siruthai siva 

அஜித்தின் 64-வது படமான AK64 படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பு நிறுவனம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

அஜித் தற்போது தன்னுடைய 62-வது படமான ‘விடாமுயற்சி’யில் நடித்து வருகிறார். இதையடுத்து 63-வது படத்திற்காக ஆதிக் ரவிச்சந்திரன் உடன் இணைகிறார்.

ஏப்ரல் அல்லது மே மாதத்தில் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அவரது அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அதன்படி சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் மீண்டும் ஒருமுறை நடிக்கவிருக்கிறார். முதன்முறையாக சன் பிக்சர்ஸ் இந்த படத்தைத் தயாரிக்க இருக்கிறது.

சூர்யா நடிப்பில் ‘கங்குவா’ படத்தை இயக்கி வரும் சிவா அப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னர், அஜித் படத்தின் வேலைகளில் இறங்குவார் என கூறப்படுகிறது.

அதேபோல ஆதிக் ரவிச்சந்திரன் படத்துக்கு பிறகு அஜித், சிவா இயக்கத்தில் நடிக்க இருக்கிறாராம். விரைவில் சிறுத்தை சிவா-அஜித் படத்திற்கான அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது ரஜினிகாந்தின் 171-வது படம் மற்றும் தனுஷின் 5௦-வது படம் ஆகியவற்றை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

-மஞ்சுளா 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

திமுகவிடம் கூடுதல் தொகுதிகளை கேட்கும் சிபிஐ!

விஜய்யை வழிநடத்தும் ‘ஜெயலலிதா’ ஜோசியர்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share