Lokesh kanagaraj gave thalaivar 171 update

கமல் பாடல் வெளியீட்டு விழா… ரஜினி பட அப்டேட் கொடுத்த லோகேஷ்

சினிமா

மாநகரம் கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ ஆகிய படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக நடிகர் ரஜினிகாந்தின் 171 வது படத்தை  இயக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. தலைவர் 171 படத்திற்கான ஸ்கிரிப்ட் பணியில் மிக பிஸியாக உள்ள லோகேஷ், தற்போது ஸ்ருதி ஹாசனுடன் இணைந்து “இனிமேல்” என்ற பாடல் வீடியோவில் நடித்துள்ளார்.

இந்தப் பாடல் வீடியோ மூலமாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகராக ஆக அறிமுகம் ஆகியுள்ளார். இனிமேல் என்ற பாடல் வீடியோவிற்கு ஸ்ருதிஹாசன் இசையமைக்க, நடிகர் கமல்ஹாசன் பாடல் வரிகளை எழுதியிருக்கிறார். இந்த பாடல் வெளியீட்டு விழா சென்னையில்  நேற்று (மார்ச் 25) நடைபெற்றது.

ராஜ்கமல் வாய்ப்பை மறுக்க முடியாது!

அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய லோகேஷ் கனகராஜ் “பொதுவாக எனக்கு நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்ததில்லை. என்னிடம் அவர்கள் கதை சொன்ன விதம் கமல்ஹாசனின் பாடல் இதெல்லாம் சேர்ந்து தான் நடிக்கலாம் என்று முடிவு செய்தேன். இதில் நடித்ததை ஒரு பெரிய நடிப்பாகவே நான் கருதவில்லை.

ராஜ்கமல் நிறுவனத்தில் இருந்து எந்த வாய்ப்பு வந்தாலும் என்னால் அதை மறுக்க முடியாது. அதுதான் முக்கியமான காரணம். இந்த ஆல்பமில் நடித்த பிறகு கொஞ்சம் தன்னம்பிக்கை வந்துள்ளது, கேமராவுக்கு முன்னால் நிற்கும் பயம் குறைந்துவிட்டது. அதற்கு காரணம் ஸ்ருதிஹாசன்.

எனக்கு படங்களை இயக்குவதே பிடித்திருக்கிறது. மூன்று படங்களுக்கு அட்வான்ஸ் வாங்கியுள்ளேன். முதலில் அதை எடுத்து முடிக்க வேண்டும்” என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து தலைவர் 171 படம் குறித்து பேசுகையில், “ஜூன் மாதத்தில் இருந்து தலைவர் 171 படப்பிடிப்பு தொடங்கும். இந்த படம் முடிந்த பிறகு கைதி 2 படத்தை இயக்க உள்ளேன் என்று லோகேஷ் கனகராஜ் தெரிவித்தார்.

Inimel': Lokesh Kanagaraj and Shruti Haasan bring the lines of Kamal Haasan to life in this track on a contemporary relationship - The Hindu

சரி இனிமேல் ஆல்பம் எப்படி இருக்கிறது?

“வழக்கமான காதல், அவர்களிடையே இணக்கமான ரொமான்ஸ், அதன்பின் வரும் ஊடல் அதனால் ஏற்படும் பிரிவு, மீண்டும் கூடல் என்ற ஃபார்முலாவில் இப்பாடல் உருவாகியுள்ளது. இந்தப் பாடல் மூலம் நடிகராக அறிமுகமாகியுள்ளார் லோகஷ் கனகராஜ்.

ஆனால், அவருக்கும் ரொமான்ஸுக்கும் ஏணி வச்சாலும் எட்டாது என்பதை ஸ்ருதிஹாசனுடனான அவரது காட்சிகளில் மென்மையைத் தாண்டிய ஒரு முரட்டுத்தனம் தெரிகிறது.  மேலும், உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதிலும் பலவீனமானவராக இருப்பது முகத்தில் பளிச்சிடுகிறது. ஆங்கிலம் கலந்த பாடல் வரிகள் தமிழ் சினிமா ரசிகனை கவரும் வகையில் இல்லை.

– இராமானுஜம் | கார்த்திக் ராஜா

Heatwave: தமிழ்நாட்டில் அதிகம் ‘வெயில்’ அடிக்கும் மாவட்டம் இதுதான்!

தூத்துக்குடியில் வேட்புமனுத் தாக்கல் செய்தார் கனிமொழி

 

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *