விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 7 கடந்த ஜனவரி மாதம் முடிவடைந்தது. இதுவரை இல்லாத அளவில் இந்த சீசனில் ஏகப்பட்ட சர்ச்சைகளும், பஞ்சாயத்துகளும் நிரம்பியிருந்தன.
பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத இந்த சீசனில் முதன்முறையாக வைல்டு கார்டு போட்டியாளரான அர்ச்சனா பட்டம் வென்றார். A டீம், B டீம் என பிரிந்து விளையாடிய போட்டியாளர்களுள், ரசிகர்கள் B டீமிற்கு மிகப்பெரிய ஆதரவளித்தனர்.
அப்படி B டீமில் முக்கிய போட்டியாளரான விஷ்ணு விஜய் தனது சினிமா பயணத்தில் முதல் அடியை எடுத்து வைக்க உள்ளார். பிக்பாஸில் இருந்த போதே தனக்கு சினிமாவில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்பதுதான் மிகப்பெரிய ஆசை என்று கூறியிருந்தார்.
இப்பொழுது அவரின் ஹீரோ கனவு நிஜமாகி உள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இந்நிலையில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
2018 ஆம் ஆண்டு வெளியான ‘சி லா சோவ்’ என்ற தெலுங்கு திரைப்படத்தின், தமிழ் ரீமேக்கில் தான் அவர் ஹீரோவாக அறிமுகம் உள்ளார். டோலிவுட்டில் வெற்றி அடைந்த இப்படம், சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதையும் தட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது.
-பிரியங்கா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ED விசாரணையில் நடந்தது என்ன? – அமீர் பேட்டி!
IPL 2024: அதுவே பெரிய தப்பு தான்… கண்டபடி கலாய்க்கும் ரசிகர்கள்!
பிரிவினை அரசியல் செய்யும் திமுக: மோடி தாக்கு!