புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் வதந்’தீ’ அணையட்டும் என கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை என்கிற வதந்தியை பாஜகவினர் சமூக வலைதளங்களில் பரப்பினர்.
இந்த வதந்திகள் நாடு முழுவதும் பேசுபொருளாக மாறியது . இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமாருடன் தொலைபேசியிலும் பேசினார்.
மேலும் , தமிழ்நாட்டில் இத்தகைய வதந்தி பரப்புவோர் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படுவர் என முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதனிடையே வட இந்திய தொழிலாளர்கள் தொடர்பாக வதந்தி பரப்பியது, வன்முறையை தூண்டும் வகையில் அறிக்கை வெளியிட்டது ஆகியவற்றுக்காக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது தமிழ்நாடு போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப் பதிவும் தொடர்ந்துள்ளனர்
இந்நிலையில், கவிஞர் வைரமுத்து தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இன்று (மார்ச் 6 ) ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதில், தமிழ்நாட்டின் கட்டமைப்பு பொருளாதாரப் பளபளப்பு முதலமைச்சரின் தேசிய பிம்பம் இவற்றைப் பொறுக்க முடியாதவர்களின் பொய் நாடகம்தான் வால் முளைத்த வதந்தி.
வதந்’தீ’ அணையட்டும் தொழிலாளர்களின் அடுப்பை அணைத்துவிட்டுத் தெருவில் தீமூட்ட வேண்டாம் தமிழ்நாடு வளர்க; தொழிலமைதி பெறுக என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
டேவிட் வார்னர் ரிட்டையர் ஆகியிருக்க வேண்டும்: ரிக்கி பாண்டிங் அதிரடி!
இளநிலை நீட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!