The Village Web Series Trailer Released

அமானுஷ்ய கிராமம்… போராடும் ஆர்யா: தி வில்லேஜ் ட்ரெய்லர் எப்படி?

சினிமா

’காதல் டூ கல்யாணம்’, ’அவள்’, ’நெற்றிக்கண்’ போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் மிலிந்த் ராவ். தற்போது இவரது இயக்கத்தில் ’தி வில்லேஜ்’ என்ற வெப் சீரிஸ் வெளியாக உள்ளது. இந்த வெப் சீரிஸில் நடிகர் ஆர்யா கதாநாயகனாக நடித்துள்ளார் .

ஷமிக் தாஸ்குப்தாவின் கிராஃபிக்ஸ் நாவலை தழுவி  உருவாகியுள்ள தி வில்லேஜ் வெப் சீரிஸ் தான், தமிழில் வெளியாக உள்ள முதல் கிராஃபிக்ஸ் நாவல் வெப் சீரிஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது. மொத்தம் 5 மொழிகளில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வரும் நவம்பர் 24 ஆம் தேதி இந்த வெப் சீரிஸ் வெளியாகிறது.

இந்த வெப் சீரிஸில், ஆர்யாவுடன் திவ்யா பிள்ளை, ஆடுகளம் நரேன், தலைவாசல் விஜய், முத்துகுமார், ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த வெப் சீரிஸின் ட்ரெய்லர் நேற்று (நவம்பர் 17) வெளியாகி உள்ளது.

தன் மனைவி, மகள் உடன் ரோடு ட்ரிப் செல்லும் ஹீரோ ஒரு அமானுஷ்யம் நிறைந்த கிராமத்தில் சிக்கி கொள்கிறார். அதன்பிறகு அந்த கிராமத்தில் இருந்து எப்படி அவர் தன் குடும்பத்தை காப்பாற்றுகிறார் என்பதே தி வில்லேஜ் வெப் சீரிஸின் ஒன் லைன். தற்போது தி வில்லேஜ் வெப் சீரிஸின் ட்ரெய்லர் வைரலாகி வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

– கார்த்திக் ராஜா

1,600 புதிய பேருந்துகள்: அண்ணாமலைக்கு பதில் அளித்த அமைச்சர் சிவசங்கர்

பாதுகாப்புப் படை பணியிடங்களுக்கான தேர்வுகளுக்கு இலவச வழிகாட்டுதல்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *