ராகவா லாரன்ஸுடன் இணைந்த லோகேஷ் கனகராஜ்

Published On:

| By Manjula

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரும் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் தயாரிப்பாளராகவும் களம் இறங்கினார்.

ரீல் குட் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து, விஜய் குமாரின் ஃபைட் கிளப் படத்தை லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் (G squad) நிறுவனம் வழங்கியது.

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ஒரு புதிய படத்தை லோகேஷ் தயாரிக்க உள்ளார் என்று கூறப்பட்டது.

அதோடு படத்தை லோகேஷின் நெருங்கிய நண்பரும் இயக்குநருமான ரத்னகுமார் இயக்குவார் என்று சொல்லப்பட்டது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில் இன்று (ஏப்ரல் 14) ஜி ஸ்குவாட் நிறுவனத்தின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அறிவிப்பை முன்னிட்டு புதிய போஸ்டர் ஒன்றையும் படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

ரெமோ, சுல்தான் படங்களை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில், ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகும் படம் இப்படத்திற்கு ‘பென்ஸ்’ என பெயர் வைத்துள்ளனர். படத்தின் கதையை லோகேஷ் கனகராஜ் எழுதியுள்ளார்.

https://twitter.com/Dir_Lokesh/status/1779385149932945418

ஃபேஷன் ஸ்டுடியோ மற்றும் தி ரூட் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து, லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனம் பென்ஸ் படத்தினை தயாரித்து வருகிறது.

ஒரு ரெட் கலர் மாஸ்க்கில் பென்ஸ் என்ற டைட்டில் இடம்பெற்றுள்ளது. அந்த மாஸ்க் பார்ப்பதற்கு சூப்பர் ஹீரோ ராபின்ஹூட் போல வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த போஸ்டரில் “A Warrior With a Cause is The Most dangerous solider” என்ற வரிகள் குறிப்பிடப்பட்டுள்ளது.

பென்ஸ் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. விரைவில் இந்த படம் குறித்த மேலதிக தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-கார்த்திக் ராஜா 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

’எங்கள் காதுகள் பாவமில்லையா?’ : பாஜகவை இறங்கியடித்த ஸ்டாலின்

முதல் படத்திலேயே ‘மகனை’ கைதியாக்கிய முத்தையா

மின்னம்பலம் மெகா சர்வே: மதுரை மாஸ் மாமன்னன் யார்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel