முதல் படத்திலேயே ‘மகனை’ கைதியாக்கிய முத்தையா

சினிமா

குட்டி புலி, கொம்பன், தேவராட்டம், விருமன் உள்ளிட்ட பல்வேறு வெற்றிப்படங்களை இயக்கியவர் முத்தையா. கிராமத்து பின்னணியில் இவர் இயக்கும் ஆக்சன் படங்களுக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

கடைசியாக இவரது இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளிவந்த காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் திரைப்படம், கலவையான விமர்சனங்களையே பெற்றது.

இதையடுத்து தன்னுடைய மகன் விஜய் முத்தையாவின் அறிமுகப்படத்தை இயக்குவதாக முத்தையா அறிவித்தார். இதனால் இப்படம் ரசிகர்கள் எதிர்பார்க்கும் படங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

இந்நிலையில் இன்று (ஏப்ரல் 14) படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்திற்கு ‘சுள்ளான் சேது’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

சிறை கைதி போன்ற கெட்டப்பில் விஜய் முத்தையா கையில் பலகையுடன் நிற்பது போல, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இதனை வைத்துப் பார்க்கும்போது வழக்கமான முத்தையா படங்களைப் போல சுள்ளான் சேதுவிலும் ஆக்சன், சென்டிமெண்ட், காமெடி என எல்லா விஷயங்களும் திரைக்கதையில் இடம்பெறும் என்று தெரிகிறது.

விரைவில் படம் குறித்த அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் விஜய் முத்தையாவிற்கு ஜோடியாக இரண்டு ஹீரோயின்கள் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

-கார்த்திக் ராஜா 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மின்னம்பலம் மெகா சர்வே: ஆரணி வெற்றிக் கனி யார் கையில்?

GOAT: கேப்டனுடன் இணைந்து ஆடும் தளபதி… புகைப்படம் உள்ளே!

மின்னம்பலம் மெகா சர்வே: திருச்சி… திருப்புமுனை வெற்றி யாருக்கு?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *