இஸ்ரேலுக்கு தொழில்நுட்ப உதவி வழங்கியதை எதிர்த்து போராட்டம் செய்த, 28 ஊழியர்களை கூகுள் நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது.
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையிலான போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. உலக நாடுகளின் சமாதான முயற்சிகளை ஏற்காமல், இருதரப்பும் கடுமையாக சண்டை செய்து வருகின்றன.
இதற்கிடையில் இஸ்ரேல் அரசு மற்றும் இஸ்ரேல் ராணுவத்துக்கு ஏஐ மற்றும் கிளவுட் சேவைகளை வழங்குவதற்காக, கூகுள் நிறுவனம் அமேசான் நிறுவனத்துடன் 1.2 பில்லியன் டாலருக்கு கூட்டு ஒப்பந்தம் செய்துள்ளது.
பாலஸ்தீனத்திற்கு எதிராக போர் தொடுத்துள்ள இஸ்ரேல் நாட்டிற்கு தொழில்நுட்ப சேவையினை கூகுள் நிறுவனம் வழங்குவதை எதிர்த்து, அங்குள்ள ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் கூகுள் நிறுவனத்தின் இந்த முடிவு நியாயமற்றது என்று கூறி கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 16) நியூயார்க், சன்னிவேல் நகரங்களில் உள்ள கூகுள் நிறுவனங்களில் ஊழியர்கள் சுமார் 10 மணி நேரத்திற்கும் மேல் தர்ணாவில் ஈடுபட்டனர்.
கூகுள் நிறுவனத்தின் புகாரையடுத்து அதில் 9 ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
தொடர்ந்து புதன்கிழமை (ஏப்ரல் 17) கூகுள் நிறுவனம் இந்த போராட்டத்தில் சம்பந்தப்பட்ட 28 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
இதுதொடர்பாக கூகுள் நிறுவனத்தின் உலகளாவிய பாதுகாப்பு தலைவர் கிறிஸ் ராக்கோ, ”அவர்கள் எங்களது இடங்களை எடுத்துக்கொண்டு சொத்துகளை சேதம் செய்தனர்.
பிற ஊழியர்கள் வேலை செய்வதை உடல்ரீதியாக தடை செய்தனர். அதோடு பிற பணியாளர்கள் அச்சுறுத்தலுக்கு ஆளாகினர். அவர்களின் நடத்தை ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் இருந்தது,” என்று தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் ஊழியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ”நிறுவனத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
மேலும், இந்தப் போராட்டத்தில் தொடர்புடைய 28 பேர் நிறுவனத்திலிருந்து நீக்கப்படுகின்றனர். இத்தகைய செயல்பாடுகளை கூகுள் ஒருபோதும் சகித்துக்கொள்ளாது”, என எச்சரித்து இருக்கிறார்.
–மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட வேண்டும்: திருமா வலியுறுத்தல்!
பிரபல ‘நடிகருக்கு’ அடிச்சது லக்.. சன் டிவியின் ‘புதிய’ சீரியல் இதுதான்!
நடிகர் அப்பாஸ்க்கு இவ்ளோ பெரிய மகன், மகளா?… வைரல் ஆகும் Photo..!