பிரபல ‘நடிகருக்கு’ அடிச்சது லக்.. சன் டிவியின் ‘புதிய’ சீரியல் இதுதான்!

சினிமா

சீரியல்களின் ராஜா என்று சொன்னாலே அது சன் டிவி தான். டிஆர்பியில் சக்கைப்போடு போடும் பல தொடர்கள் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்றன.

குடும்பத் தலைவிகளுக்கென்று சீரியல் எடுத்த காலம் போய், இப்பொழுது இளைய தலைமுறையை கவரும் வகையில் சீரியல்களின் கதையும், காட்சியும் அமைக்கப்படுகின்றன.

அந்த வகையில் புதிய சீரியல் ஒன்றை சன் டிவி துவங்கியுள்ளது.’மல்லி’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சீரியலில், ஜீ தமிழில் பூவே பூச்சுடவா, பிரியாத வரம் வேண்டும், பேரன்பு போன்ற தொடர்களில் ஹீரோவாக நடித்த விஜய் வெங்கடேசன் நடிக்கிறார்.

அவருக்கு ஜோடியாக ‘சூரியவம்சம்’ சீரியலில் நடித்த நிகிதா ஒப்பந்தம் ஆகி உள்ளார். இந்த நிலையில் ‘மல்லி’ சீரியலின் புதிய புரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.

படித்து பெரிய இடத்தில் இருக்கும் ஹீரோ, கிராமத்தில் கட்டிடம் கட்ட பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார். வெள்ளந்தி கிராமத்து பெண் கேரக்டரில் ஹீரோயின் அவருடன் வந்து மோதுகிறார்.

மோதலில் ஆரம்பிக்கும் இந்த சந்திப்பு எதிர்காலத்தில் என்னவாக முடியும்? என்பது தான் சீரியலின் கதையம்சம். புரோமோ பார்த்த ரசிகர்கள், நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

-பிரியங்கா 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மக்களவைத் தேர்தல் : 9 மணி வரை 12.55% வாக்குப்பதிவு!

“ஓட்டுப் போட எப்படி ஊருக்கு போறது?” – கிளாம்பாக்கத்தில் பயணிகள் போராட்டம்!

+1
1
+1
2
+1
0
+1
1
+1
0
+1
1
+1
4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *