புத்தாண்டு பார்ட்டி பஸ்: அப்டேட் குமாரு

டிரெண்டிங்

நண்பர் ஒருத்தருக்கு இன்னைக்கு கால் பண்ணி, “புத்தாண்டு வாழ்த்துக்கள்… நியூ இயர் செலிபரேஷன்லாம் எப்படி போய்க்கிட்டு இருக்குன்னு” கேட்டேன்.

அதற்கு அவரு, “அதெல்லாம் சிறப்பா போய்க்கிட்ருக்கு நண்பா. நைட் பார்ட்டி இருக்கு. என்ன ஒரு பிரச்சனைனா ஒரு மணிக்கெல்லாம் பார்ட்டி முடிஞ்சிருமாம்.

ஆளாளுக்கு எந்த திசையில இருப்போம்னே தெரியாது. இந்த மாதிரி சமயத்துல பார்ட்டிக்கு போனவங்கள பத்திரமா வீட்டுக்கு கொண்டு  வந்து விடுற மாதிரி அரசு சார்புல ஏதாவது பஸ் அரேன்ஜ் பண்ணா நல்லாருக்கும்லனு” சொன்னாப்ல.

“ஆமா நண்பா…அதுக்கு பார்ட்டி பஸ்னு பேரு வச்சா இன்னும் பொருத்தமா இருக்கும்னு” சொல்லிட்டு போனை வச்சிட்டேன்.

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

புது வருசம் பிறக்கும் போது நன்றாக குறட்டை விட்டு தூங்கி கொண்டு இருக்க போகிறவர் எனில் நீயும் என் தோழனே..!

கடைநிலை ஊழியன்

girl friend – இந்த நியூ இயர், நா உன் கூட celebrate பண்ணல டா..

ஏன்..

girl friend – போன இயர் உன் கூட celebrate பண்ணி தான் சரி இல்ல..

எனக்கொரு டவுட்டு!?

தட் ஆர்வக்கோளாறு ப்ரெண்ட் ~ அண்ணே நான் இந்த கடைலதான் ஜிம்முக்கு பணம் கட்டிருக்கேன், காலைல எத்தனை மணிக்கு கடை தொறப்பீங்க..

பேசாம போயிரு அதான் உனக்கு மரியாதை..

ச ப் பா ணி

பிரதமர் மோடிக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் புத்தாண்டு வாழ்த்து!

மலை.. நல்லாயிருக்கியா மலை

mohanram.ko

அதுல பாருங்க சம்மந்தி, நான் பொய் சொல்லும் போதெல்லாம் கைதட்டுனாங்க, ஒரே ஒரு உண்மையை சொன்னேன்… ஒருத்தரும் நம்பலை

சரண்யா
புது வருடத்தில் இருந்து இந்த விஷயத்தை செய்ய போகிறேன் என்று சொல்வது, நாளை முதல் குடிக்க மாட்டேன் என்று சொல்லும் குடிகாரன் சொல் போன்றது..
வன்ம கிச்சா
Resolution ஏதும் எடுக்கலயா ??? அதலாம் ஏன்டா அசிங்கமா எடுத்துக்கிட்டு…!! Resolution–ஏ இனி எடுக்க கூடாதுன்னு ஒரு Resolution எடுத்துட்டு இருக்கேன் நான்லா

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பொங்கல் பரிசு தொகை எப்போது?

யாருடன் தேர்தல் கூட்டணி: டிடிவி தினகரன் பதில்!

+1
7
+1
12
+1
0
+1
2
+1
0
+1
2
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *