90-ஸ் கிட்ஸ் பெண்களின் கனவுக் கண்ணனாகத் திகழ்ந்தவர் நடிகர் அப்பாஸ். சாக்லேட் பாய் வேடங்களின் வழியே இளம்பெண்களின் மனதைக் கொள்ளை அடித்தவர், என்ற பெருமையும் இவருக்குண்டு.
மாடலாக தனது வாழ்க்கையை ஆரம்பித்த அப்பாஸுக்கு 1996-ல் வெளியான ‘காதல் தேசம்’ மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. வினித் மற்றும் தபுவுடன் இவரது நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது.
ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான இப்படத்தின் பாடல்கள் இன்றும் பலரது காலர் டியூனாக இருக்கிறது. தொடர்ந்து அவர் நடித்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், படையப்பா, ஆனந்தம், மின்னலே திரைப்படங்கள் மிகப்பெரிய ஹிட் அடித்தன.
அதற்குப் பிறகு அவருக்கு சரியான பட வாய்ப்புகள் இல்லை. கடைசியாக 2014-ஆம் ஆண்டு வெளியான ‘ராமானுஜன்’ திரைப்படத்தில் அப்பாஸ் நடித்திருந்தார். அதன் பிறகு தனது குடும்பத்துடன் நியூசிலாந்தில் செட்டில் ஆகி விட்டார்.
சில வருடங்களுக்கு முன்பு பேட்டி ஒன்றில் தோன்றிய அவர், தான் நியூசிலாந்தில் கிடைத்த வேலைகளை எல்லாம் செய்து வருவதாகவும், மனைவி குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்வதாகவும் கூறினார்.
இந்நிலையில் நடிகர் அப்பாஸின் லேட்டஸ்ட் குடும்ப புகைப்படம் தற்பொழுது வைரலாகி வருகிறது. அவருக்கு இவ்வளவு பெரிய மகன், மகள் இருக்கிறார்களா? என்று ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
-பிரியங்கா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உங்கள் வாக்குச்சாவடியில் கூட்டம் அதிகமா? தெரிந்து கொள்வது எப்படி?
முதல் ஆளாக வாக்களித்தார் அஜித்