Anand Mahindra gifted a car

பிரக்ஞானந்தா பெற்றோருக்கு கார் பரிசளிக்கும் ஆனந்த் மஹிந்திரா

இந்தியா தமிழகம்

இந்தியாவின் இளம் செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தா பெற்றோருக்கு எலக்ட்ரிக் காரை பரிசளிக்க உள்ளதாக மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார்.

சென்னையை சேர்ந்த 18 வயதான பிரக்ஞானந்தா தற்போது 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். சிறு வயதில் இருந்து செஸ் விளையாடுவதில் ஆர்வமிக்க பிரக்ஞானந்தா நடந்து முடிந்த உலகக்கோப்பை செஸ் போட்டியில், நம்பர் 1 செஸ் வீரரான மேக்னஸ் கார்ல்சனுக்கு டஃப் ஃபைட் கொடுத்தார்.

முதல் இரண்டு சுற்றுகளையும் டிராவில் முடித்தார் பிரக்ஞானந்தா. 18 வயதான பிரக்ஞானந்தா 32 வயது கார்ல்சனுக்கு எதிராக விளையாடிய போது ஒட்டுமொத்த இந்தியாவுமே பிரக்ஞானந்தா வெற்றி பெற வேண்டும் என்று எதிர்பார்த்தது.
ஆனால் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார்.

பிரக்ஞானந்தாவின் இந்த வெற்றிக்கு அவரது தாய் மிக உறுதுணையாக இருந்தார். மகன் செல்லும் நாடுகளுக்கு தானும் உடன் செல்வார்.

இந்த உலக கோப்பையின் போது பிரக்ஞானந்தா கவனிக்கப்பட்டாரோ இல்லையோ உலக மக்கள் மத்தியில் அவரது அம்மா நாகலட்சுமி கவனிக்கப்பட்டார்.

தனது மகன் விளையாடிக் கொண்டிருக்க சாதாரண புடவையில் பிரக்ஞானந்தாவின் வெற்றிக்காக காத்திருந்த தாய் நாகலட்சுமியின் புகைப்படம் உலகளவில் ட்ரெண்டானது.

தனது மகன் மற்றவர்களுக்கு ஆட்டோகிராப் போடுபோது அதை நாகலட்சுமி தள்ளி நின்று ரசித்த புகைப்படம், தான் வாங்கிய பதக்கத்தை அம்மாவுக்கு போட்டு பார்த்து பிரக்ஞானந்தா அழகு பார்த்த தருணம் என பல புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்தன.

Anand Mahindra gifted a car

பிரபல புகைப்படக் கலைஞர் மரியா எமேலியநோவா, கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, அவரது தாயாருடன் இணைந்து ஒரு செல்பி எடுத்து தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்தார்.

அதில்,  மரியா எமேலியநோவா போட்ட கேப்ஷன் மீண்டும் நாகலட்சுமியை பற்றி பேச வைத்தது. அதாவது, “லெஜண்ட் மற்றும் அவரது மகனுடன் செல்பி எடுத்துக்கொண்டேன்” என்று பகிர்ந்திருந்தார் மரியா.

பிரக்ஞானந்தா பதக்கம் வென்ற போதும் அவரது அம்மாவை லெஜண்ட் என்று மரியா கூறியிருப்பதன் மூலம் தனது மகனின் வெற்றிக்கு நாகலட்சுமி எவ்வளவு உறுதுணையாக இருக்கிறார் என்பதை அந்த பதிவு உணர்த்தியது.

Anand Mahindra gifted a car

இந்நிலையில் மகனின் வெற்றிக்கு ஆதரவாக இருக்கும் பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு கார் பரிசளிக்க இருப்பதாக தொழிலதிபரும், மஹிந்திரா குழும தலைவருமான ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார்.

பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு கார் பரிசளிக்க வேண்டும் என்று ஆனந்த் மஹிந்திராவுக்கு ட்விட்டரில் பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுதொடர்பாக ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில், “க்ரிஷ்லே போன்ற சமூக வலைதளவாசிகள் பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு தார் கார் பரிசளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

Anand Mahindra gifted a car

ஆனால் எனக்கு இன்னொரு யோசனை இருக்கிறது…

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை செஸ் விளையாட்டிற்கு அறிமுகப்படுத்தி, அவர்கள் இந்த விளையாட்டை (வீடியோ கேம்களின் பயன்பாடு அதிகரித்துள்ள போதிலும்!) தொடர ஆதரவளிக்க  ஊக்குவிக்க விரும்புகிறேன்.

இது சிறந்த எதிர்காலத்திற்கான முதலீடு. எனவே, பிரக்ஞானந்தா பெற்றோருக்கு XUV4OO EV காரை பரிசளிக்க விரும்புகிறேன்.

நாகலட்சுமி மற்றும் ரமேஷ்பாபு தங்கள் மகனின் ஆர்வத்தை வளர்த்ததற்காகவும், அவருக்குத் தங்களின் அயராத ஆதரவை வழங்கியதற்காகவும் நன்றி தெரிவித்துகொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனந்த் மஹிந்திராவின் பதிவு பாராட்டுகளை பெற்று வருகிறது.

பிரியா

ஜாமினில் கூட வெளிவர முடியாது: ஆர்.கே.செல்வமணிக்கு பிடிவாரண்ட் உத்தரவு!

அமைச்சர் உதயநிதியின் துறை அலட்சியம் : நான்கு வயது சிறுவன் மரணம்!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

1 thought on “பிரக்ஞானந்தா பெற்றோருக்கு கார் பரிசளிக்கும் ஆனந்த் மஹிந்திரா

  1. முன்பு விஸ்வநாத் ஆனந்த் விளையாடும்போது ஆரம்பகாலத்திலிருந்து அவருக்கு கிடைத்த ஊடக விளம்பர வெளிச்சம் இன்று பிரக்ஞானந்தாவுக்கு அவ்வளவாக கிடைக்க வில்லையே. அவருக்கும் இவருக்கும் உள்ள நூல் அளவு வித்தியாசம்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *