rk selvamani get non bailable arrest warrant in bothra case

ஜாமினில் கூட வெளிவர முடியாது: ஆர்.கே.செல்வமணிக்கு பிடிவாரண்ட் உத்தரவு!

சினிமா

அவதூறு வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இயக்குநர் ஆர்.கே.செல்வமணிக்கு ஜாமினில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 28) உத்தரவிட்டுள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களை இயக்கி முன்னணி இயக்குநராக வலம் வந்த ஆர்.கே. செல்வமணி தற்போது திரைப்பட இயக்குநர் சங்கம் மற்றும் ஃபெஃப்சி சங்கத்தில் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஆர்.கே செல்வமணி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ அருள் அன்பரசு ஆகியோர் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தனர். அப்போது சினிமா பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ரா குறித்து சில கருத்துக்களைத் தெரிவித்தனர்.

rk selvamani get non bailable arrest warrant in bothra case

இதனைத் தொடர்ந்து பைனான்சியர் போத்ரா, தன்னை குறித்து பேசிய ஆர்.கே. செல்வமணி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ ஆகியோர் மீது சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.

போத்ரா மறைவுக்குப் பின்னர், அவருடைய மகன் இந்த வழக்கைத் தொடர்ந்து நடத்தி வருகிறார். இந்த வழக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஆர்.கே செல்வமணி மற்றும் அருள் அன்பரசு இருவரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனையடுத்து இருவருக்கும் ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடிவாரண்டை பிறப்பித்தது சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (ஆகஸ்ட் 28) மீண்டும் 5-வது மாஜிஸ்திரேட் முன்பு விசாரணைக்கு வந்தது. எனினும் விசாரணைக்கு ஆர்.கே.செல்வமணியோ, அவரது தரப்பு வழக்கறிஞரோ ஆஜராகவில்லை.

இதனை கண்டித்த சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம், ஆர்.கே. செல்வமணிக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்டை பிறப்பித்துள்ளது. மேலும் வழக்கு விசாரணையும் வரும் செப்டம்பர் 22 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

‘தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் அதிகரிப்பு’: தங்கம் தென்னரசு

அமைச்சர் உதயநிதியின் துறை அலட்சியம் : நான்கு வயது சிறுவன் மரணம்!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0