கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் 2022-23 ஆம் கல்வியாண்டிற்கான தேர்வுகள் நிறைவு பெற்று 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 29 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டது.
இன்னும் சில தினங்களில் கோடை விடுமுறை நிறைவடைய உள்ள நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறக்கப்படும் தேதியை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
இந்நிலையில், இன்று (மே 26) தலைமைச் செயலாளர் மற்றும் முதன்மை செயலாளருடன் ஆலோசனை நடத்தி இரண்டு தேதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இதில் எந்த தேதியை முதலமைச்சர் தேர்வு செய்கிறாரோ அந்த தேதியில் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து பள்ளிகள் திறக்கப்படும் தேதியை அறிவித்துள்ளார் அமைச்சர் அன்பில் மகேஷ். அதன்படி, ”தமிழ்நாடு முதல்வரின் ஆணைக்கிணங்க கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து மாணவர்களை பாதுகாக்கும் வகையில் ஜூன் 7 ஆம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மோனிஷா
மலேசியா மாஸ்டர்ஸ்: அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து
ஐ.டி. ரெய்டு: அதிகாரிகளின் கார் கண்ணாடியை உடைத்த திமுகவினர்!