Yகோயம்பேடு: காய்கறிகள் விலை சரிவு!

public

சென்னையின் பிரதான சந்தையான கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகள் விலை சரிந்துள்ளது.

கேரளாவில் பெய்துவரும் கனமழையால் கர்நாடகா மற்றும் ஆந்திராவில் உற்பத்தி செய்யப்பட்ட காய்கறிகள் கோயம்பேடு சந்தையில் குவிந்துள்ளது. இதனால் காய்கறிகள் தேவை குறைந்து கோயம்பேடு மொத்த விலை சந்தையில் 50 விழுக்காடு வரை விலை சரிந்துள்ளது. தக்காளி கிலோ ஒன்றுக்கு ரூ.7 முதல் ரூ.10 வரை மட்டுமே விற்பனையாகிறது. ஆனால் ஜூலை மாதத்தில் தக்காளி விலை கிலோ ஒன்றுக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனையானது. வெங்காயம் தற்போது கிலோ ஒன்றுக்கு ரூ.8-10 வரை விற்பனையாகிறது. இதன் விலை ஜூலையில் கிலோ ஒன்றுக்கு ரூ.15-16 வரை இருந்தது. உருளைக்கிழங்கு தற்போது கிலோ ஒன்றுக்கு ரூ.18-20 வரை விற்பனையாகிறது. இதன் விலை ஜூலையில் கிலோ ஒன்றுக்கு ரூ.20-22 வரை இருந்தது. கத்தரிக்காய் தற்போது கிலோ ஒன்றுக்கு ரூ.10-12 வரை விற்பனையாகிறது. ஜூலையில் கிலோ ஒன்றுக்கு ரூ.15-20 வரை இருந்தது.

பீன்ஸ் தற்போது கிலோ ஒன்றுக்கு ரூ.10-20 வரை விற்பனையாகிறது. ஜூலையில் இதன் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.20-30 வரை இருந்தது. கேரட் தற்போது கிலோ ஒன்றுக்கு ரூ.20-30 வரை விற்பனையாகிறது. ஜூலையில் இதன் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.30-40 வரை இருந்தது. பச்சை மிளகாய் தற்போது கிலோ ஒன்றுக்கு ரூ.20-22 வரை விற்பனையாகிறது. ஜூலையில் இதன் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.25-30 வரை இருந்தது. பீட்ரூட் தற்போது கிலோ ஒன்றுக்கு ரூ.8-10 வரை விற்பனையாகிறது. ஜூலையில் இதன் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.12-14 வரை இருந்தது.

இதுகுறித்து கோயம்பேடு காய்கறி வர்த்தக சந்தையின் தலைவர் எஸ்.சந்திரன் *தி இந்து* ஆங்கில ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில், “கோயம்பேடு சந்தைக்கு மற்ற சந்தைகளிலிருந்து சிறிய டிரக்குகளில் 4 முதல் 6 டன் வரையிலான காய்கறிகள் வந்துள்ளன. இதனால் விலை சரிந்து உள்ளூர் உற்பத்தியாளர்களுக்குப் பாதிப்பை உண்டாக்கியுள்ளது. வழக்கமாக மொத்த விலை சந்தைகளில் நள்ளிரவு 2 முதல் காலை 8 மணி வரையில் விற்பனை மிகவும் பரபரப்பாக இருக்கும். ஆனால் இப்போது 9, 10 மணிக்கு மேலாகியும் காய்கறிகள் இருப்பில் உள்ளன. இதனால் விலையைக் குறைக்க வேண்டிய நிலைக்கு வர்த்தகர்கள் தள்ளப்படுகின்றனர். இல்லையென்றால் காய்கறிகள் தேங்கி வீணாகிவிடும்” என்றார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *