Yகேட்டது 5 டி.எம்.சி கிடைத்தது பாதி!

public

தமிழகத்தில் நிலவும் வறட்சியும், தண்ணீர் பஞ்சமும் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் தாமதமாக நடவடிக்கையில் இறங்கியுள்ளது தமிழக அரசு.

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்த முதல்வர் பன்னீர் செல்வம் சென்னை எதிர்கொள்ள இருக்கும் குடிநீர் பிரச்சனையை சமாளிக்க கடந்த 7-ஆம் தேதி ஆந்திர முதல்வருக்கு கடிதம் எழுதினார் அக்கடிதத்தில்”தமிழகம் மற்றும் ஆந்திரா இடையில் 1984-ம் ஆண்டு ஏப்ரல் 18-ம் தேதி செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி, ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து ஆண்டுக்கு 12 டிஎம்சி நீர் திறந்து விட வேண்டும். தமிழக எல்லையில் நீர் ஆவியானது போக 12 டிஎம்சி தண்ணீர் சென்னையின் குடிநீருக்காக இரண்டு பாகங்களாக வழங்கப்பட வேண்டும். வழக்கமாக ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சியும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சியும் வழங்கப்படும். ஆனால், கடந்தாண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரையில் 0.99 டிஎம்சி மட்டுமே திறந்து விடப்பட்டுள்ளது.” எனக் கூறியிருந்தார்.

12 டி.எம்.சி தண்ணீர் தர வேண்டிய நிலையில் கண்டலேறு அணையில் 13.53 டி.எம்.சி தண்ணீர் இருப்பு உள்ள நிலையில் தமிழகம் சென்னையில் குடிநீர் தேவைக்காக 5 டி.எம்.சி தண்ணீரை முதல் தவணையாக உடனடியாக அவசரகதியில் விட வேண்டும் எனக் கோரியது. அதற்காகத்தான் தமிழக முதல்வர் ஆந்திர முதல்வரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடந்த ஆந்திர மாநிலம் சென்றார். ஆனால், இந்த சந்திப்பையடுத்து தமிழகத்திற்கு 2.5 டி.எம்.சி. தண்ணீர் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆந்திரம் தருவதாக ஒப்புக் கொண்டிருக்கும் தண்ணீர் சென்னைக்கு போதாது எனும் நிலையில் 5.டி.எம்.சி தண்ணீரை பெறுவதற்கான முயற்சியில் தமிழக அரசு உள்ளது. அடுத்தவாரம் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆந்திர அதிகாரிகள் நடத்தும் பேச்சுவார்த்தையில் பராமரிப்பு நிதியை ஆந்திராவுக்கு கொடுப்பது உள்ளிட்ட சில முடிவுகளை எடுத்த பின்னர் 5 டி.எம்.சி தண்ணீரை ஆந்திரம் சென்னை விடும் எனத் தெரிகிறது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *