yஅதிமுக கூட்டணி தேவையா? பாமக ஆலோசனைக் கூட்டம்!

public

அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால் கால் சீட்டுக்கும், அரை சீட்டுக்கும் கெஞ்ச வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம் என்று கடந்த டிசம்பர் 31 ஆம் தேதியன்று நடந்த பாமகவின் பொதுக்குழு கூட்டத்தில் வெளிப்படையாக பேசினார் அன்புமணி.

இதற்கு அதிமுக தரப்பில் இருந்து எவ்வித ரியாக்‌ஷனும் வராத நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் பாட்டாளி இளைஞர் சங்கம் உள்ளிட்ட துணை அமைப்புகளின் மாவட்ட, மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வரும் 5-ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து பாமக தலைவர் ஜி.கே. மணி இன்று வெளியிட்டிருக்கும் அறிவிப்பில்,

“ விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த தைலாபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் பயிலரங்க வளாகத்தில் அமைந்துள்ள மாங்கனி அரங்கில் இந்தக் கூட்டம் நடைபெறும். பா.ம.க. நிறுவனர் முன்னிலையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்திற்கு பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி தலைமையேற்கிறார். பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்கள். பாட்டாளி மக்கள் கட்சியின் துணை அமைப்புகளில் பாட்டாளி இளைஞர் சங்கம், பாட்டாளி மகளிர் சங்கம், பாட்டாளி இளம்பெண்கள் சங்கம், பாட்டாளி மாணவர் சங்கம் ஆகியவற்றின் மாநில செயலாளர்கள், மாநில துணை செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆகியோரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட கட்சி வளர்ச்சிப் பணிகள் தொடர்பான முடிவுகளை செயல்படுத்துவது குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படவிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

அதிமுகவுடன் கூட்டணியை தொடர்வதா வேண்டாமா என்பது குறித்தே இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட இருப்பதாக தெரிகிறது. பொதுக்குழுவில் அன்புமணி பேசியது போல இந்த ஆலோசனைக் கூட்டத்தில் டாக்டர் ராமதாஸே கூட்டணி குறித்து அதிருப்தி வெளியிடலாம் என்கிறார்கள் பாமக நிர்வாகிகள்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *