Xஸ்ரீதேவி குடும்பம் கேட்பது என்ன?

public

மக்கள் யாரும் பார்க்க முடியாத வண்ணம் மலர்ச்சரங்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலம் நடந்து முடிந்து, விலே பார்லே பகுதியில் உள்ள சேவா சமாஜ் எரியூட்டும் மைதானத்துக்குக் கொண்டுவரப்பட்டது. ஷாருக் கான் உள்ளிட்ட பிரபலங்கள் கடைசி தருணத்திலாவது ஸ்ரீதேவியின் உடலைப் பார்த்துவிட வேண்டுமெனப் படப்பிடிப்பிலிருந்து நேரடியாக வந்து பார்த்தனர். அதன் பின்னர் ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்குகள் சம்பந்தமான ஏற்பாடுகள் முடிவடைந்து அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

ஸ்ரீதேவியின் இழப்பு ரசிகர்களிடமும் அவரது குடும்பத்தினரிடமும் மிகுந்த வேதனையைத் தந்திருக்கிறது. இந்த நிலையில் ஸ்ரீதேவியின் உடலைத் தகனம் செய்துவிட்டு வீடு திரும்பியிருக்கும் அவரது குடும்பத்தினர் தங்களுடைய மனவேதனையை ஏஎன்ஐக்கு அளித்துள்ள பேட்டியில் பகிர்ந்துள்ளனர்.

“கடந்த சில நாள்களாக எங்களைத் தேற்றிக்கொள்ள மிகவும் முயற்சித்தோம். முக்கியமாக இன்று மிகவும் கடினமான நாளாக இருந்தது. நம்மை விட்டு சீக்கிரமே பிரிந்துவிட்ட அழகின் ஆன்மாவை ஓய்வெடுக்கவிட்டு வந்திருக்கிறோம். ஸ்ரீதேவி விட்டுச்சென்ற வரலாறு தனித்த சிறப்பைக்கொண்டது. அதுபோலவே அவர் எங்களிலும் தனித்தன்மை உடையவர்.

ஸ்ரீதேவியின் மீது அன்பு செலுத்தியது போலவே அவரின் இதயத்துக்கு நெருக்கமான அவர் தனது வாழ்க்கையாகவே நினைத்த இரு குழந்தைகள் மீதும் அன்பு செலுத்துவது அவருக்கு நாங்கள் செய்யும் மரியாதையாக இருக்கும். அம்மாவின் அன்பில் அகமகிழ்ந்து வாழ்ந்துவந்த இருவரும், அவர்கள் வாழ்வில் இதயத்தில் சிறு வலியுடன் முன்னேறத் தேவையான உதவிகளை நாங்கள் செய்வோம்.

ஸ்ரீதேவி தனது மகள்கள்மீது வைத்திருந்த மதிப்பையும், அவர்களின் வாழ்க்கையைக் கட்டமைக்க அவர் உதவியதையும், அவர்கள் எப்படி வரவேண்டுமெனக் கனவு கண்டதையும் நிறைவேற்ற வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது. எங்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கான துயரத்தை ஆற்றிக்கொள்வதற்கான நேரத்தை வேண்டுகிறோம். மிகவும் நேர்மையாக வாழ்ந்தவர் ஸ்ரீதேவி. அந்த நேர்மையை எந்தச் சமயத்திலும் மாற்றிவிடக் கூடாது என்பது மட்டுமே எங்கள் கோரிக்கை” என்று கபூர், ஐயப்பன் மற்றும் மார்வா குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒரு நண்பனை இழந்து விட்டேன். என் மனைவியாகவும் இரண்டு மகள்களுக்குத் தாயாகவும் இருந்த ஸ்ரீதேவியை இழந்ததை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. என்னுடைய குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் என்னுடன் பணிபுரிபவர்களுக்கும் என் நலம் விரும்பிகளுக்கும் ஸ்ரீதேவியின் எண்ணிலடங்கா ரசிகர்களுக்கும் இந்தத் தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் ஆதரவையும் ஆசீர்வாதத்தையும் கொண்டிருக்கிறேன். அர்ஜுன் மற்றும் அனுசுலா எனக்கு உறுதுணையாகவும், குஷி மற்றும் ஜான்வி என்னுடைய தூண்களாகவும் இருப்பதால் இந்தத் துயரத்திலிருந்து மீள முயற்சிக்கிறேன். என் உலகுக்கு அவர் அமைதியின் சொரூபமாக இருந்தார். இந்த உலகுக்கு அவர் நடிகையாக இருந்தாலும், என் அன்பிற்குரியராகவும், என் குழந்தைகளுக்கு தாயாகவும் என் நண்பராகவும் நல்ல துணையாகவும் இருந்தார். அவரின் இரண்டு மகள்களின் வாழ்க்கைக்கு அனைத்துமாக இருந்தார்.

எங்கள் குடும்பத்தின் அச்சாணியாக இருந்தார். என் அன்பான மனைவி என்னிடம் விடை பெற்றுக்கொண்டதும் குஷி மற்றும் ஜான்வி அவர்களின் தாய்மாமன்களிடம் வேண்டுகோள் விடுப்பது என்னவென்றால், தனிப்பட்ட முறையில் நீங்கள் வருத்தப்பட வேண்டிய அவசியத்தைத் தயவுசெய்து மதிக்கவும். நீங்கள் ஸ்ரீதேவி பற்றி ஒவ்வொரு முறை பேசும் போதும் அவரின் நினைவுகள் உங்களை எங்களோடு இணைக்கும். தன்னுடைய இடத்தை வேறொரு நபரால் இணைக்க முடியாத அளவுக்கு அவர் இருந்தார். அன்பால் அவருக்கு மரியாதை செலுத்த வேண்டிய நேரம் இது.

திரைச்சீலைகள் ஒரு நடிகையின் வாழ்க்கையில் ஒரு போதும் இறங்குவதில்லை. ஏனென்றால் அவர்கள் எப்போதும் வெள்ளித் திரையில் பிரகாசிப்பவர்கள். இந்த நேரத்தில் எனக்கு ஒரே கவலை. எனது மகள்களைப் பாதுகாப்பதோடு ஸ்ரீதேவி இல்லாமல் முன்னோக்கி நகர்வதற்கு வழியைக் காண்கிறேன். அவள் எங்கள் வாழ்க்கையாகவும், எங்களின் வலிமையாகவும் மற்றும் எங்கள் புன்னகைக்குக் காரணமாகவும் இருக்கிறாள். நாங்கள் அவளுடன் பின்னிப்பிணைந்த உறவை நேசித்தோம்.

அமைதியான ஓய்வில் இரு எனதன்பே… உன் வாழ்வு மீண்டும் ஒருபோதும் மாறாது…” என்று உருக்கமாகப் பதிவிட்டுள்ளார் போனி கபூர்.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *