Xகிச்சன் கீர்த்தனா: முட்டை தொக்கு

public

‘முட்டை நல்ல உணவல்ல’ என்று தி அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் (The American Heart Association – AHA) அறிவித்தது. ‘இதன் மஞ்சள் கருவிலிருக்கும் அதிகபட்ச கொழுப்பால் இதய நோய்கள் வரக்கூடும்’ என்று காரணமும் சொல்லப்பட்டது. ஆனால், பிறகு வந்த ஆராய்ச்சிகளோ ‘அப்படி எந்த ஆபத்தும் இதனால் ஏற்படாது’ என்றன. வாரம் ஆறு முட்டைகளைச் சாப்பிடுபவர்களின் ரத்த அளவு ஒரே நிலையில்தான் இருக்கும் என்பதும் கண்டறியப்பட்டது.

அருமையான செட்டிநாடு ரெசிப்பி போன்று மிகவும் சுவையாக இருக்கும் இந்த முட்டை தொக்கை சாதத்தில் பிசைந்து சாப்பிடுவதற்கும், சைடிஷ்ஷாகவும் பயன்படுத்தலாம்.

**என்ன தேவை?**

வேகவைத்த முட்டை – 3

வெங்காயம் – 2

தக்காளி – 2

பூண்டு – 10 பல்

மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்

மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்

தனியா (மல்லி) தூள் – டீஸ்பூன்

கடுகு – சிறிதளவு

சோம்புத்தூள் – ஒரு டீஸ்பூன்

கறிவேப்பிலை – 5 இலை

மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

கொத்தமல்லி – சிறிதளவு

**எப்படிச் செய்வது?**

முதலில் வெங்காயம், தக்காளி, பூண்டு முதலியவற்றை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சோம்புத்தூள், கறிவேப்பிலை போட்டுத் தாளித்து பூண்டினைச் சேர்த்து வதக்கவும். பூண்டு வதங்கியவுடன் வெங்காயம், தக்காளியை ஒன்றின்பின் ஒன்றாகப் போட்டு 2 – 3 நிமிடங்கள் நன்றாக வதக்கிக்கொள்ளவும். இத்துடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், வேகவைத்த முட்டை, உப்பு சேர்த்து, மசாலா வாசனை போகும் வரை வேகவிடவும். கடைசியில் மிளகுத்தூள், கொத்தமல்லி தூவி மேலும் ஒரு நிமிடம் கிளறி வேகவிடவும். சுவையான முட்டை தொக்கு ரெடி.

**குறிப்பு**

முட்டையை 10 முதல் 15 நிமிடங்கள் வேகவைப்பது தவறு. அளவுக்கு அதிகமாக வேகவைத்தால் முட்டையில் பிரவுன் மற்றும் சாம்பல் நிறத்தில் ஒரு படிவம் படிந்துவிடும். அந்த முட்டைகளை உட்கொள்ளக் கூடாது. முட்டையை 7 நிமிடங்கள் வரை வேகவைத்தாலே போதும்.

[நேற்றைய ரெசிப்பி: முட்டை மிளகு வறுவல்](https://www.minnambalam.com/k/2019/09/15/2)

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *