Wராஜஸ்தான் செல்லும் வேலைக்காரன்!

public

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் வேலைக்காரன் படத்தின் மற்ற காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் எஞ்சியுள்ள பாடல் காட்சிக்காக ராஜஸ்தான் செல்ல இருக்கிறது படக்குழு.

மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகிவரும் இதில் அனிருத் இசையில் அவரே பாடிய ‘கருத்தவன்லாம் கலீஜா’ பெரும் வரவேற்பைப் பெற்றது. இதன் மற்றொரு பாடலான ‘இறைவா’ பாடலை நவம்பர் 2ஆம் தேதி வெளியிடவுள்ளனர். சிவகார்த்திகேயன், நயன்தாரா இருவருக்குமான டூயட் பாடலை படமெடுக்கத்தான் இன்று (அக்டோபர் 28) செல்ல இருக்கிறது படக்குழு. இதன் படப்பிடிப்பு ராஜஸ்தானின் அஜ்மீர் பகுதியில் மூன்று நாள்கள் நடைபெற இருக்கிறது.

இது ஒருபுறம் நடந்துகொண்டிருக்க படத்தின் விநியோக உரிமை சூடுபிடித்து வருகிறது. சென்னை, திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற பகுதிகளின் விநியோக ஒப்பந்தம் நிறைவடைந்ததை அடுத்து இதன் மற்ற பகுதிகளின் விநியோக உரிமை குறித்தான பேச்சுவார்த்தைகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி படத்தின் வெளியீட்டு உரிமையை மதுரையில் ‘சுஷ்மா சினி ஆர்ட்ஸ்’ நிறுவனமும், கோவையில் ‘கந்தசுவாமி ஆர்ட்ஸ் சென்டர்’ நிறுவனமும், வட ஆற்காடு & தென் ஆற்காட்டில் ‘S பிக்சர்’ நிறுவனமும் கைப்பற்றியுள்ளதாக, படத்தின் தயாரிப்பு நிறுவனமான 24 ஏஎம் ஸ்டுடியோஸ் அறிவித்துள்ளது.

ஆயுத பூஜை விடுமுறை கொண்டாட்டமாக வெளிவரவிருந்த இந்தத் திரைப்படம், வருகிற டிசம்பர் 22ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக வெளிவரவிருக்கிறது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *