vபாதுகாப்பு குறைபாடோடு செயல்படும் வங்கிகள்!

public

சென்னை வங்கிகளில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

நாட்டில் தற்போது பெரிய பெரிய நிறுவனங்களின் இணையதளங்கள் ஹேக் செய்யப்படுவதும், வாடிக்கையாளர்களின் கணக்குகளில் இருந்து பணம் திருடப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. அதன்படி சென்னையில் செயல்பட்டு வரும் வங்கிகளில் கடந்த ஆறு மாதங்களில் வாடிக்கையாளர்களின் கணக்குகளில் இருந்து ஆன்லைன் மூலம் பணம் திருடப்பட்டுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. வங்கி கணக்குகளில் இருந்து நூதன முறையில் பணம் திருடப்படுவதாகச் சென்னை காவல் ஆணையருக்கு அடிக்கடி புகார்கள் வந்துள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு ரூ.16 கோடியும், 2017ஆம் ஆண்டு தற்போது வரை ரூ.7 கோடி என மொத்தம் ரூ.25 கோடி வாடிக்கையாளர்களின் கணக்குகளில் இருந்து நூதன முறையில் எடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த மோசடிகளுக்குத் தீர்வு காணும் வகையில் சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் நேற்று ஜூன்-15 ஆம் தேதி மாலை அனைத்து வங்கியின் தகவல் தொழில் நுட்ப பிரிவு அதிகாரிகளை அழைத்து, விழிப்புணர்வு கூட்டம் ஒன்றை நடத்தினார். இந்த கூட்டத்தில் காவல்துறை தரப்பில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் கணேசமூர்த்தி, துணை ஆணையர்கள் செந்தில்குமார், லலிதா லட்சுமி, கூடுதல் துணை ஆணையர் வெங்கடாசலபதி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதில் வங்கி வாடிக்கையாளர்கள் பறிகொடுத்த தொகை குறித்த விவரங்களை காவல்துறையினர் பட்டியலாக தயாரித்து அனைத்து வங்கி அதிகாரிகளுக்கும் வழங்கினர்.அந்த பட்டியலில் பாதுகாப்பு இல்லாத வங்கியாக ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதாவது ஸ்டேட் பாங்க் வாடிக்கையாளர்களின் 547 பேர் கணக்குகளில் இருந்து ரூ. 3 கோடியே 37 லட்சம் நூதன முறையில் எடுக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, இந்தியன் வங்கியின் வாடிக்கையாளர்கள் 284 பேர் 35 லட்சம் ரூபாயும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் வாடிக்கையாளர்கள் 83 பேர் 82 லட்சம் ரூபாயும், ஐசிஐசிஐ வங்கியின் வாடிக்கையாளர்கள் 107 பேர் 54 லட்சம் ரூபாயும், ஆக்சிஸ் வங்கியின் வாடிக்கையாளர்கள் 78 பேர் 30 லட்சம் ரூபாயையும் ஆன்லைன் மோசடி கும்பலால் நூதன முறையில் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி சுமார் 34 வங்கிகள் பாதுகாப்பு இல்லாத வங்கிகளில் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

வங்கிகளின் வாடிக்கையாளர்களின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளில் இருந்தும், ஓடிபி எண்ணை திருடியும் ஆன்லைன் கும்பல் பணம் எடுப்பதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். வங்கிகள் பிரசுரங்களை காவல் துறையிடம் கொடுத்தால் தாங்களும் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தத் தயாராக உள்ளோம் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி வாடிக்கையாளர்களின் கிரெடிட் மற்றும் டெபிட். கார்டுகளின் விவரங்கள் ஆன்லைன் மோசடி நபர்களிடம் சென்று விடுகிறது, இதனைத் தடுப்பதற்கு வங்கிகள் சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

இதற்கு ரிசர்வ் வங்கியின் ஒப்புதலுடன் இரண்டடுக்கு பாதுகாப்புடன் பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ளும் புதிய முறையைக் கொண்டுவருவதற்கான நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக வங்கிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *