_தொடர்ந்து உச்சத்தில் கொரோனா பரவல்!

Published On:

| By Balaji

நாடு முழுவதும் ஒரே நாளில், 68,020 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று அசுர வேகத்தில் பரவி வருகிறது. இந்தியாவில் புதிதாக 68,020 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,20,39,644 ஆக உயர்ந்தது.

கொரோனாவால் புதிதாக 291 பேர் இறந்துள்ளனர். நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,61,843 ஆக உயர்ந்தது. நேற்று மட்டும் 32,231 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 5,21,808 பேர் சிகிச்சையில் உள்ளனர். நாடு முழுவதும் நேற்று வரை 6,05,30,435 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் மார்ச் மாதம் மட்டும் 10 வயதிற்குட்பட்ட 472 குழந்தைகளுக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 472 பேரில் 244 சிறுவர்கள் மற்றும் 226 சிறுமிகள் அடங்குவர்.

தமிழகத்தில் 2,194 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதில் 11 பேர் நேற்று உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் 833 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 188 பேருக்கும், கோவையில் 180 பேருக்கும், திருவள்ளூரில் 117 பேருக்கும், தஞ்சாவூரில் 108 பேருக்கும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி, நெகமம் பகுதியில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால், மக்கள் பாதுகாப்பாக இருக்க சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர் கடந்த வாரத்தில், கப்பளாங்கரையில் இரு பெண்கள் உள்பட நான்கு பேருக்கு, தொற்று உறுதி செய்யப்பட்டு, கோவை ஈ.எஸ்.ஐ.,மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து, நெகமம் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்தவர்கள், தினமும் இருவருக்கு தொற்று பாதிக்கப்பட்டு, மருத்துவமனைக்கு செல்கின்றனர்.

**களையிழந்த ஹோலி பண்டிகை**

இன்று நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. கொரோனா தொற்று காரணமாக டெல்லியில் பொது இடங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.

மகாராஷ்டிராவில் ஊரடங்கு அமலில் உள்ளதால் மக்கள் வீடுகளிலேயே ஹோலி பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர்.

டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட பகுதிகளில் ஹோலி கொண்டாட்டங்கள் நடைபெற்றாலும் ,பொது இடங்களில் ஹோலி கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுபோன்று ஓடிசாவிலும் ஹோலி கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

**வினிதா*

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share