Uகாப்பி வாசனையுடன் தபால் தலைகள்!

public

நேற்று (ஏப்ரல் 23) இந்திய யூனியனின் தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன், மற்றும் கர்நாடக மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மனோஜ் சிங்க்ஹா இருவரும் பெங்களூரு தலைமை அஞ்சலகத்தில் காப்பி வாசனைக் கொண்ட தபால் தலைகளை வெளியிட்டனர். இந்திய பாதுகாப்பு அச்சகத்தில் அச்சிடப்பட்ட இந்தத் தபால் தலைகளின் விலை ரூ.100. இவை அனைத்தும் தலைமை அஞ்சல் அலுவலகங்களிலும் கிடைக்கும். முதல் முதலில் பூடான் நாடு1973 ஆம் ஆண்டு இதுபோன்ற வாசனைத் திரவியங்கள் மூலம் மணமூட்டப்பட்ட தபால் தலைகளை வெளியிட்டது. அந்தப் பட்டியலில் நியூசிலாந்து தாய்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் பின்னர் இணைந்தனர்.

கடந்த 2006-ல் இந்தியாவில் முதன் முறையில் சந்தன மணமூடப்பட்டு ரூ.15 விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட தபால் தலைகள் இரண்டே வாரங்களில் விற்றுத் தீர்ந்தன. அதன் மொத்த மதிப்பு ரூ.30 லட்சம். 2007 ல் இதேபோன்று ரோஜா வகைகளின் வெவ்வேறு மணங்களான ஜவகர், நீலம், டெல்லி பிரின்சஸ், பிம் போன்றவையும்,2008ல் மல்லிகை மணத்திலும் ரூ.5 மதிப்பில் நறுமணமூட்டப்பட்ட தபால் தலைகள் வெளியிடப்பட்டன.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *