Uஉள்நாட்டுக் கார் விற்பனை சரிவு!

public

கடந்த ஜனவரி மாதத்தில் இந்தியாவின் உள்நாட்டுப் பயணிகள் வாகன விற்பனை 7.57 சதவிகிதம் உயர்ந்துள்ளது. எனினும், கார் விற்பனையில் 1.25 சதவிகிதம் சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் பிப்ரவரி 12ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஜனவரி மாதத்தில் இந்தியாவில் மொத்தம் 2,85,477 பயணிகள் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 2016ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் விற்பனையான 2,65,389 வாகனங்களை விட 7.57 சதவிகிதம் அதிகமாகும். அதேநேரம் கார் விற்பனையில் 1.25 சதவிகித சரிவு ஏற்பட்டுள்ளது. அதாவது உள்நாட்டில் விற்பனையான கார்களின் எண்ணிக்கை 2017 ஜனவரியில் 1,86,596லிருந்து 2018 ஜனவரியில் 1,84,264 ஆகக் குறைந்துள்ளது.

மோட்டார் சைக்கிள் விற்பனையைப் பொறுத்தவரையில் 8,19,385 என்ற எண்ணிக்கையிலிருந்து 28.64 சதவிகித உயர்வுடன் 10,54,062 ஆக உயர்ந்துள்ளது. மொத்த இருசக்கர வாகன விற்பனை 33.43 சதவிகித உயர்வுடன் 16,84,066 ஆக உள்ளது. 2017 ஜனவரியில் மொத்தம் 12,62,140 இருசக்கர வாகனங்கள் மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டிருந்தன. 85,660 வர்த்தக பயன்பாட்டு வாகனங்கள் இந்த ஜனவரியில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த வாகன விற்பனை 30.71 சதவிகித உயர்வுடன் 21,17,746 ஆக உள்ளது. 2017 ஜனவரியில் மொத்தம் 16,20,179 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தன’ என்று கூறப்பட்டுள்ளது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *