tஐ.பெரியசாமி முன்னிலையில் திமுகவினர் மோதல்!

public

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி முன்னிலையில், திமுகவினர் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் திமுக சார்பில் தேர்தல் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த 26ஆம் தேதி ராமநாதபுரம் தொகுதிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் ஆலோசனைக் கூட்டம் மாவட்டச் செயலாளர் கே.முத்துராமலிங்கம் தலைமையில் நேற்று (டிசம்பர் 29) தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் ஆதரவாளர் பேசிக்கொண்டிருந்தபோது, முத்துராமலிங்கத்தின் ஆதரவாளர்கள் ஓரமாக நின்று கொண்டிருந்துள்ளனர். அவர்களை நோக்கி சுப.தங்கவேலன் ஆதரவாளர் மேடையை மறைக்காமல் நிற்குமாறு கூறியதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து சுப.தங்கவேலன் மற்றும் முத்துராமலிங்கம் ஆதரவாளர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருகட்டத்தில் அது மோதலாக வெடித்தது. இரு தரப்பினரும் நாற்காலிகளை வீசியும், ட்யூப் லைட்களை பிடுங்கி வீசியும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். ஐ.பெரியசாமி தலையிட்டு இரு தரப்பினரையும் சமாதானம் செய்யும் முயற்சிகளை மேற்கொண்ட நிலையிலும், மோதல் நீடித்தது. இதன் காரணமாக ஆலோசனைக் கூட்டம் பாதியிலேயே முடிவடைந்தது. ஐ.பெரியசாமி முன்னிலையில் திமுகவினர் மோதலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ராமநாதபுரம் மாவட்டச் செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் மகன் சுப.த.திவாகரனை மாற்றிவிட்டு, அந்த இடத்துக்கு முத்துராமலிங்கத்தை நியமனம் செய்தது திமுக தலைமை. ஆனால், முத்துராமலிங்கத்தை மாற்ற வேண்டும் என்று ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் திமுக தலைமைக் கழகத்தில் புகார்களும் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

.

** மேலும் படிக்க … **

**[விஜயகாந்துக்கு அமெரிக்காவில் என்ன சிகிச்சை நடக்கிறது?](https://minnambalam.com/k/2018/12/29/95)**

**[சென்னை அபிராமி மால் மூடப்படுகிறது!](https://minnambalam.com/k/2018/12/29/80)**

**[கொங்கு: ஸ்டாலின் போடும் கணக்கு!](https://minnambalam.com/k/2018/12/29/8)**

**[கொங்கு கூட்டணி: எடப்பாடி போடும் கணக்கு!](https://minnambalam.com/k/2018/12/29/56)**

**[தோல்வியை தள்ளிப்போட்ட ஆஸ்திரேலிய அணி!](https://minnambalam.com/k/2018/12/29/44)**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *