sபுதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி உயர்வு!

public

இந்தியாவில் காற்றாலை மற்றும் சோலார் மூலமான ஆற்றல் உற்பத்தி வேகமாக அதிகரித்துவருகிறது.

இதுகுறித்து *மெர்கோம் இந்தியா* வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவில் சோலார் மூலம் 21,651 மெகா வாட்டும், காற்றாலைகள் மூலம் 34,145 மெகா வாட்டும் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு செப்டம்பரில் சோலார் மூலம் 25,000 மெகா வாட்டும், காற்றாலைகள் மூலம் 34,393 மெகா வாட்டும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டில் சோலார் மூலம் 1 லட்சம் மெகா வாட்டும், காற்றாலைகள் மூலம் 60,000 மெகா வாட்டும் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

காற்றாலை உற்பத்தி இந்த ஆண்டில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பாதுகாப்பு வரி மற்றும் ஏல நடவடிக்கைகளால் சோலார் உற்பத்தியில் இந்த ஆண்டின் முதல் அரையாண்டில் சற்று தொய்வு காணப்பட்டது. ஆனால், இரண்டாம் அரையாண்டில் சோலார் நிறுவுதல் பணிகள் முதல் அரையாண்டைக் காட்டிலும் சற்று மந்தமாகவே நடைபெறும். 2019ஆம் ஆண்டிலும் இந்த நிலை தொடரலாம்’ என்று கூறப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் ஒழுங்குமுறை விதிகளால் சோலார் உற்பத்தித் திட்டத்துக்கான செலவுகள் அதிகரித்துள்ளதாக அத்துறையினர் கூறுகின்றனர்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *