oஐநா தீர்மானம்: வாக்களிக்க மறுத்த இந்தியா!

public

மரண தண்டனைக்கும், துன்புறுத்தல்களுக்கும் பயன்படுத்தப்படும் பொருட்களின் வணிகத்தை நிறுத்துவதற்கு ஐநா பொதுச்சபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு வாக்களிக்க இந்தியா மறுத்துவிட்டது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 81 நாடுகளும், எதிர்ப்பு தெரிவித்து 20 நாடுகளும் வாக்களித்துள்ளன. மேலும் 44 நாடுகள் வாக்களிக்க மறுத்துள்ளன.

மரண தண்டனை, மனித வதை, கொடுமை உள்ளிட்ட கொடூர பயன்பாடுகளுக்காக பயன்படுத்தப்படும் பொருள்களின் விற்பனை, ஏற்றுமதி, இறக்குமதிக்கு சர்வதேச தரநிலைகளை வகுப்பதற்கு பொதுச்சபை உறுப்பினர்களின் கருத்துகளைக் கேட்கும்படி ஐநா பொதுச்செயலாளரிடம் சபை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு வாக்களிக்க இந்தியா மறுத்துவிட்டது.

வாக்களிக்க மறுத்ததற்கு விளக்கமளித்த ஐநாவுக்கான இந்தியாவின் முதன்மை செயலாளர் பவுலோமி திரிபாதி, “இந்த தீர்மானத்தில் மரண தண்டனையும் சேர்க்கப்பட்டுள்ளது துன்புறுத்தல்களுக்கும், கொடுமைகளுக்கும் நிகராக மரண தண்டனையை நிறுத்துவதற்கான முயற்சியாக தெரிகிறது. மனித வதை, துன்புறுத்தல்கள், கொடுமைகளை தடுக்க இந்தியா தன்னை உறுதியாக அர்ப்பணித்துள்ளது.

மனித வதை ஒரு குற்றம் எனவும், சட்டவிரோதமானது எனவும் இந்தியா உறுதியாக நம்புகிறது. சட்டரீதியாக மரண தண்டனை வழங்கப்படும் நாடுகளிலும், உரிய சட்ட நடைமுறைகளுக்கு பின்னரே மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது. ஒவ்வொரு அரசுக்கும் தன் சொந்த சட்ட அமைப்பையும், தண்டனைகளையும் தீர்மானிப்பதற்கான உரிமை உள்ளது. மனித வதையையும், மரண தண்டனையையும் ஒரே நிலையில் நிறுத்துவதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்தியாவில் மரண தண்டனைகள் சட்டரீதியாக வழங்கப்பட்டாலும், அரிதிலும் அரிதான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை விதிக்கப்படுகிறது. நடைமுறைக் குறைபாடுகளை கருத்தில் கொண்டு இந்த தீர்மானத்திற்கு இந்தியாவால் ஆதரவளிக்க முடியவில்லை. ஆகையால் வாக்களிக்க மறுத்துவிட்டோம்.

இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் மனித வதை என்பது தண்டனைக்குரிய குற்றமாக இருக்கிறது. மனித வதைச் செயல்களுக்கு எதிரான அரணாக இந்திய நீதித்துறை செயல்பட்டு வருகிறது. பன்முக வர்த்தகம் ஏற்கெனவே நெருக்கடியில் இருப்பது தெளிவாக தெரிகிறது. இந்த சூழலில் தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் வர்த்தக கட்டுப்பாடுகளை விதிப்பது சர்வதேச வர்த்தக அமைப்பில் கூடுதல் பிரச்சினைகளை உருவாக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

**

மேலும் படிக்க

**

**[போன் போட்ட தினகரன்; பேட்டி கொடுத்த பழனியப்பன்](https://minnambalam.com/k/2019/06/29/47)**

**[சபரீசனை எம்பி ஆக்குகிறாரா ஸ்டாலின்?](https://minnambalam.com/k/2019/06/29/22)**

**[டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு: ஸ்டாலின் தயக்கம்- நிஜப் பின்னணி சொன்ன எடப்பாடி](https://minnambalam.com/k/2019/06/28/89)**

**[முதல்வர் மாவட்ட கலெக்டர் மாற்றம் ஏன்?](https://minnambalam.com/k/2019/06/28/88)**

**[இணையத்தை கலக்கும் அஜித் – யுவன் மேஜிக்!](https://minnambalam.com/k/2019/06/27/44)**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *