N18 பேர் வந்தால் ஏற்றுகொள்வோம்!

public

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் அதிமுகவில் மீண்டும் இணைகிறோம் என்று சொன்னால், கட்சித் தலைமை அதுகுறித்து முடிவு செய்யும் என்றும், யாரையும் புறந்தள்ளிவிட முடியாது என்றும் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க வழக்கில் நேற்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. முதலில் தீர்ப்பை வாசித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று அறிவிக்க, மற்றொரு நீதிபதி சுந்தரோ, சபாநாயகரின் உத்தரவு செல்லாது என்று மாறுபட்ட தீர்ப்பை அளித்தார். இதனால் வழக்கு மூன்றாவது நீதிபதியின் அமர்வுக்கு மாற்றப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து சென்னை வண்ணாரப்பேட்டையில் இன்று (ஜூன் 15) செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், தீர்ப்பை யாரும் விமர்சனம் செய்யக் கூடாது, ஆனால் கருத்து சொல்லலாம். தலைமை நீதிபதியின் தீர்ப்பை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது எங்களின் கருத்து. அவருடைய தீர்ப்பில், ‘பேரவைத் தலைவரின் முடிவில் உள்நோக்கம் இல்லை, பேரவைத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது, பேரவைத் தலைவரின் முடிவை மறு ஆய்வுக்கு உட்படுத்தக் கூடாது’ உள்ளிட்டவை முக்கிய அம்சமாக உள்ளன. மாறுபட்ட தீர்ப்பை இன்னொரு நீதிபதி வழங்கியதால், மூன்றாவது நீதிபதிக்கு வழக்கு செல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது” என்று கூறினார்.

துரோகங்கள் வென்றதாகச் சரித்திரம் இல்லை, வீழ்ந்ததாகத்தான் சரித்திரம் உள்ளது. எனவே துரோகம் வீழும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. அதனையே தீர்ப்பு குறித்த எங்களுடைய கருத்தாக தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறிய அமைச்சர், “ஜெயலலிதா அமைத்த அரசானது ஐந்து ஆண்டுகள் தொடர வேண்டும் என்பதே ஒவ்வொரு அதிமுக தொண்டனின் எண்ணமாக உள்ளது. இதற்கு மாறாகச் செயல்படுபவர்களை நிச்சயமாக ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது” என்றும் தன் பேச்சில் குறிப்பிட்டார்.

18பேர் மீண்டும் அதிமுகவுக்கு வந்தால் அவர்களை ஏற்றுக் கொள்வீர்களா என்ற கேள்விக்கு, பேரறிஞர் அண்ணா கூறியதுபோல மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு. மாற்றான் தோட்டமாக இருந்தாலும் மதிக்கும் பண்பைப் பெற்றவர்கள் நாங்கள். 18 எம்.எல்.ஏ.க்கள் இணைகிறோம் என்று சொன்னால், கட்சித் தலைமை அதுகுறித்து முடிவு செய்யும். யாரையும் புறந்தள்ளிவிட முடியாது என்று குறிப்பிட்ட ஜெயக்குமார், ஆனால் தினகரனையும் அவரை சார்ந்தோரையும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளும் முடிவை எடுக்க மாட்டோம்” என்று தெரிவித்தார்.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *