“ஊதிய கோரிக்கையை நிறைவேற்றுங்கள்”: முதல்வர் ஸ்டாலினுக்கு அரசு மருத்துவர்கள் வேண்டுகோள்!

Published On:

| By Kavi

அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும் என்று அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு (LCC) வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் பெருமாள் பிள்ளை இன்று (மே 17) வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“திமுக ஆட்சி அமைந்ததும் அரசு மருத்துவர்களின் ஊதிய கோரிக்கை நிறைவேற்றப்படும் என முதல்வர் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது, போராட்டத்திலிருந்த மருத்துவர்களிடம் நேரில் வந்து உறுதியளித்தார். ஆனால் திமுக ஆட்சி அமைந்து மூன்று ஆண்டுகாலம் நிறைவடைந்தும் அரசு மருத்துவர்களின் ஒற்றை கோரிக்கை கூட நிறைவேற்றப்படவில்லை.

கொரோனா 3 அலைகளிலும் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றிய அரசு மருத்துவர்கள் மீது முதல்வரின் பார்வை விழவில்லை.

கொரோனாவுக்கு பிறகும் அரசு மருத்துவர்களை அங்கீகரிக்க மறுக்கும் ஒரே மாநிலமாகத் தமிழகம் உள்ளது. அதுவும் நாட்டிலேயே தமிழகத்தில் தான் ஊதிய கோரிக்கைக்காக மருத்துவர் ஒருவர் உயிரையே கொடுத்துள்ளார்.

மருத்துவர் பெருமாள் பிள்ளை

கொரோனா பேரிடரில் பணியாற்றி உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தனின் மனைவிக்கு அரசு வேலை தர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டு ஓராண்டு கடந்த பின்னரும் அரசு கருணை காட்டவில்லை.

தற்போது அரசு மருத்துவர்களின் ஊதிய கோரிக்கையை 6 வாரத்திற்குள் நிறைவேற்ற வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புடனும் மருத்துவர்கள் உள்ளோம்.

ஓராண்டாகக் கொண்டாடப்படும் கலைஞரின் நூற்றாண்டு விழா நிறைவடைய இருக்கிறது. இந்த நேரத்தில் நீண்டகாலமாகக் கிடப்பில் போடப்பட்டுள்ள கலைஞரின் அரசாணைக்கு உயிர் கொடுத்தால் தான், கலைஞரின் நூற்றாண்டு விழா முழுமையடையும்.

எனவே நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தமிழக முதல்வர், அரசு மருத்துவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கு வழங்கப்படும் என்ற அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும். திவ்யா விவேகானந்தனுக்கு, அரசு வேலைக்கான ஆணையை வழங்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

“நாட்டின் வளர்ச்சியை பாருங்கள்” : ராஷ்மிகா வீடியோ – மோடி ரியாக்‌ஷன்!!

“இப்படியொரு கூட்டுக்குள்ள வாழ தோணுதே”: வைரலாகும் யானை குடும்பம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel