nகிச்சன் கீர்த்தனா: டிரை ஃப்ரூட் குக்கீஸ்

public

tகுக்கீஸ் என்பது மிருதுவான பிஸ்கட்டுகளின் ஒரு வகை. உலகின் சில பகுதிகளில் பிஸ்கட்டுகளே ‘குக்கீஸ்’ என்று அழைக்கப்படுகின்றன. பார்த்தவுடன் செய்துபார்க்கத் தூண்டுகிற இந்த டிரை ஃப்ரூட் குக்கீஸை எவ்வித சிரமமும் இன்றி எளிதில் தயாரித்து வீட்டிலுள்ளவர்களை அசத்தலாம்.

**என்ன தேவை?**

கோதுமை மாவு – ஒரு கப்

பொடித்த ஓட்ஸ் – அரை கப்

வெண்ணெய் – அரை கப்

துருவிய வெல்லம் – அரை கப்

பொடித்த சர்க்கரை – 2 டீஸ்பூன்

பேக்கிங் பவுடர் – அரை டீஸ்பூன்

பேக்கிங் சோடா – கால் டீஸ்பூன்

உலர்திராட்சை – ஒரு டேபிள்ஸ்பூன்

நறுக்கிய பாதாம் – ஒரு டேபிள்ஸ்பூன்

நறுக்கிய முந்திரி – ஒரு டேபிள்ஸ்பூன்

நெய் – தேவையான அளவு

**எப்படிச் செய்வது?**

கோதுமை மாவுடன் ஓட்ஸ், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்த்துக் கலக்கவும். வெண்ணெயுடன் வெல்லம், சர்க்கரை சேர்த்து நன்கு அடிக்கவும். இதனுடன் உலர்திராட்சை, நறுக்கிய பாதாம், முந்திரி, மாவு கலவை சேர்த்துக் கலக்கவும். சுத்தமான சமையல் மேடையில் நெய் தடவி, இந்தக் கலவையைக் கொட்டி, கனமான சப்பாத்தியாகத் தேய்க்கவும். பிறகு, குக்கி கட்டர் கொண்டு துண்டுகளாக்கவும் (கத்திகொண்டும் செய்யலாம்).

180 டிகிரி ப்ரீஹீட் செய்யப்பட்ட அவனில் (oven) 10 முதல் 15 நிமிடங்கள் வரை வைத்து ஓரங்கள் லேசாகப் பழுப்பு நிறமானதும் எடுக்கவும். பிறகு, திருப்பிப் போட்டு மீண்டும் 2 – 3 நிமிடங்கள் வைத்து எடுக்கவும். ஆறிய பிறகு காற்றுப்புகாத டப்பாவில் சேகரித்துப் பயன்படுத்தவும்.

[நேற்றைய ரெசிப்பி: டிரை ஃப்ரூட் சிக்கி](https://www.minnambalam.com/k/2020/12/14/1)�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *