mஜெயலலிதா நினைவிடத்தில் மத்திய அமைச்சர்!

public

தமிழக அரசின் நடவடிக்கைகளில் மத்திய அரசு தலையிடவில்லை என்று சென்னையில் மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றக் கட்டடத்தின் 125ஆவது ஆண்டு விழா நேற்று (செப்டம்பர் 16) கொண்டாடப்பட்டது. விழாவில் கலந்துகொள்வதற்காக மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சென்னைக்கு வருகை தந்தார். விழாவில் கலந்துகொண்ட பிறகு, மெரினா கடற்கரையிலுள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்குச் சென்று அவருக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அதிமுக மாநிலங்களவை எம்.பி நவநீதகிருஷ்ணன் உடனிருந்தார்.

அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நவநீதகிருஷ்ணன், “ஜெயலலிதா ஒரு சிறந்த தேசியவாதி. தொலைநோக்குப் பார்வை கொண்டவர். தைரியமானவர். அவர் பயங்கரவாதத்தைக் கடுமையாக எதிர்த்தார். தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் அவரது பணியைச் சிறப்பாக செய்து வருகிறார். தமிழக அரசின் எந்த நடவடிக்கைகளிலும் மத்திய அரசு தலையிடவில்லை” என்றார்.

நீட் தேர்வு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ரவிசங்கர் பதிலளிக்காமலேயே சென்றுவிட்டார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *