Kமகப்பேறு நிதியுதவி திட்டம்!

public

தேவதாசி முறை ஒழிப்பு, பால்ய விவாகத் தடைச்சட்டம் போன்றவற்றைப் போராடிச் செயல்படுத்திய இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி அம்மையார். இவரது நினைவினைப் போற்றும் வகையில், டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு நிதியுதவி திட்டத்தை 1989ஆம் ஆண்டு ஏழை எளிய பெண்களுக்காகத் தொடங்கியவர் கலைஞர் கருணாநிதி.

கலைஞரின் ஆட்சி அமைகிறபோதெல்லாம் தொலைநோக்குடைய சமூக நலனுக்கான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. எந்தவொரு திட்டமும் அரைகுறையாக அறிவிப்போடு நின்றுவிடவில்லை. மாறாக, முழுமையான வடிவம் பெற்றிருக்கிறது. குறிப்பாக, கருவுற்ற பெண்களுக்கு நிதி உதவி வழங்கும் டாக்டர் முத்துலட்சுமி நினைவு மகப்பேறு நிதியுதவி திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டது. 1989-90ஆம் ஆண்டில் ரூ 200, 1996-2001இல் ரூ 500, 2006இல் ரூ.6,000 வழங்கியது முதலில் கலைஞரின் ஆட்சியில்தான். உலக நாடுகளில் இந்தத் திட்டம் வேறு எங்கும் கொண்டுவரப்படவில்லை.

இத்திட்டத்தின் கீழ், பிரசவிக்கும் காலமறிந்து இலவசமாக 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் ஆரம்பச் சுகாதார நிலையம் அடைந்து, அங்கு இலவசமாக பிரசவம் நடக்கிறது. உடனே குழந்தைக்கு டவல், உடை, சேனிடைசர், கிலுகிலுப்பை வரை அடங்கிய, 700 ரூபாய் மதிப்புடைய பரிசுப் பெட்டகமும் தரப்படுகிறது.

மருத்துவமனையில் மூன்று நாட்கள் தங்கியிருக்கும்போது, தாய்மார்களுக்கு மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்கப்படுகிறது. மருத்துவமனையிலிருந்து வீட்டுக்குச் செல்லும்போது இலவசமாக ஊர்தியில் ஏற்றிச் சென்று தாய்மார்கள் விடப்படுவதுடன், உடனே டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு நிதியுதவித் திட்ட உதவித் தொகையில் இருந்து ரூபாய் 4,000 தரப்படுகிறது.

பிறப்பு முதல் தேவையான அனைத்துத் தடுப்பூசிகளும், குழந்தைக்குச் சர்வதேசத் தரத்துடன் இலவசமாக வழங்கப்படுகிறது. 105ஆவது நாள் தடுப்பூசி குழந்தைக்குப் போடப்பட்டதும், மீண்டும் ரூபாய் 4,000 தரப்படுகிறது. இப்படித் தான் தமிழ்நாட்டில் அரசு சுகாதாரத்துறை கர்ப்பிணிப் பெண்களைக் கவனித்து வருகிறது. இப்போது வரை மகத்தான முறையில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம் கலைஞரால் கொண்டுவரப்பட்டது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *