Kஆபாச இணையதளங்களுக்குத் தடை!

public

ஆபாச இணையதளங்களை முடக்கும்படி உத்தராகண்ட் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து, 827 இணையதளங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இணையதளங்களில் ஆபாச வீடியோக்களைப் பல நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. இதற்குச் சில நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் குழந்தைகள் தொடர்பான ஆபாசப் படங்களை வெளியிட மட்டுமே தடை விதிக்கப்பட்டது.

ஆபாச இணையதளங்களை முடக்கும்படி, உத்தராகண்ட் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், 857 ஆபாச இணையதளங்களை முடக்கும்படி கடந்த மாதம் 27ஆம் தேதியன்று உத்தரவிட்டது. இந்த உத்தரவின்படி, அவற்றை முடக்குவதற்கான நடவடிக்கைகளை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மேற்கொண்டது.

857 ஆபாசத் தளங்களை ஆய்வு செய்ததில், அவற்றில் 30 தளங்களில் ஆபாசப் படங்கள் இல்லை என்று தெரியவந்தது. மீதி 827 தளங்களில் ஆபாசப் படங்கள் இருந்தன. அவற்றை முடக்கும்படி மத்திய எலக்ட்ரானிக் தகவல் தொழில்நுட்பத் துறையானது தொலைத்தொடர்புத் துறைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, இணையதள வசதிகள் வழங்கும் அனைத்துத் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும், ஆபாசத் தளங்களை முடக்குமாறு உத்தரவிட்டுள்ளது தொலைத்தொடர்புத் துறை. படிப்படியாக, பட்டியலிடப்பட்ட அனைத்து ஆபாச இணையதளங்களும் முடக்கப்பட்டு வருகின்றன.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *