Jகல்வி: பகுதிநேர பி.இ படிப்பு

public

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளில், 2016 – 17-ம் கல்வியாண்டில், பகுதிநேர பி.இ, பி.டெக் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து, தொழில்நுட்ப கல்வி இயக்குநர் மதுமதி அளித்துள்ள அறிக்கையில், ‘பகுதிநேர பி.இ, பி.டெக் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் அன்று, பட்டயப்படிப்பு முடித்து, இரண்டாண்டுகள் முழுமையாக நிறைவுபெற்றிருந்தால் மட்டுமே விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் பணிபுரிபவராகவும், குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்திருக்கவும் வேண்டும். www.ptbe-tnea.com என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின், அதை பிரதி எடுத்து, உரிய ஆவணங்கள் மற்றும் பதிவுக்கட்டணத்துடன் அனுப்பி வைக்கவேண்டும். மேலும் விவரங்களுக்கு, www.ptbe-tnea.com இணையதள முகவரியில், information and instruction to candidate என்ற பகுதியில் மேலும் விவரங்களை அறியலாம்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *