hரஞ்சி: முச்சதம் அடித்த மயங்க் அகர்வால்

public

ரஞ்சிப் போட்டியில் கர்நாடகாவைச் சேர்ந்த 26 வயதான மயங்க் அகர்வால் 490 பந்துகளில் முச்சதம் கடந்தார். இதன்மூலம் கர்நாடகா அணி 5 விக்கெட் இழப்புக்கு 628 ரன்கள் குவித்து 383 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

ரஞ்சிக் கோப்பை தொடரில் புனேவில் நடைபெறும் ஆட்டத்தில் மகாராஷ்டிரா, கர்நாடகா அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற கர்நாடகா அணி மகாராஷ்டிராவை பேட்டிங் செய்ய அழைத்தது. மகாராஷ்டிரா தனது முதல் இன்னிங்க்ஸில் 245 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய கர்நாடகா அணி 5 விக்கெட் இழப்புக்கு 628 ரன்கள் குவித்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மயங்க் அகர்வால், 490 பந்துகளில் 4 சிக்ஸர், 30 பவுண்டரிகளுடன் முச்சதம் எடுத்து 304 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இழந்தார். அதன்பின் 383 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாம் இன்னிங்ஸைத் தொடங்கிய மகாராஷ்டிரா அணி, மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்தது.

இந்த வருட ரஞ்சிப் போட்டியில் பேட்ஸ்மேன்கள் அதிகக் கவனத்துக்கு ஆளாகியுள்ளார்கள். ரஞ்சிப் போட்டி ஆரம்பித்த சில வாரங்களுக்குள் மூன்று வீரர்கள் முச்சதம் அடித்து விட்டார்கள். ஹிமாசல் பிரதேசத்தின் பிரசாந்த் சோப்ரா, ஆந்திராவின் ஹனுமா விஹாரி ஆகியோருக்குப் பிறகு தற்போது கர்நாடகாவைச் சேர்ந்த 26 வயது மயங்க் அகர்வால் முச்சதம் எடுத்துள்ளார்.

ரஞ்சித் தொடரில் கர்நாடகா சார்பில் இதற்கு முன்பு கே.எல்.ராகுல், கருண் நாயர் ஆகியோர் முச்சதம் எடுத்துள்ளனர். இவர்களுடன் தற்போது மயங்க் அகர்வாலும் இணைந்துள்ளார். இது இந்திய முதல்தர கிரிக்கெட்டின் 50ஆவது முச்சதம் ஆகும்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *