gமேற்கு வங்கம்: பாஜக – சிபிஐ (எம்) கூட்டு?

public

மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தலில் திருணமூல் காங்கிரஸைத் தோற்கடிக்க மாவட்ட அளவில் பாஜக மற்றும் சிபிஐ (எம்) கட்சிகள் இடையே கூட்டணி ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேற்கு வங்க மாநிலத்தில் வரும் 14ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், பதிவான வாக்குகள் மே 17ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் மாநிலத் தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யவிடாமல் ஆளுங்கட்சியான திருணமூல் தடுப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இது தொடர்பாக கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தங்கள் கட்சியைச் சேர்ந்த பலரை நேரில் மனு தாக்கல் செய்யவிடாமல் ஆளும் திருணமூல் காங்கிரஸ் கட்சியினர் தடுத்துவருகின்றனர்; எனவே, தேர்தல் ஆணையத்திடம் நேரடியாக இ-மெயில் மூலம் வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். மின்னஞ்சல் மூலம் வேட்புமனு தாக்கல் செய்த 800க்கும் மேற்பட்டோரின் விவரத்தையும் நீதிமன்றத்தில் அளித்தனர்.

இதையடுத்து, உள்ளாட்சித் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான ஏப்ரல் 23ஆம் தேதி மாலை 3 மணிவரை இ-மெயில் மூலம் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், தேசிய அளவில் எதிரெதிர் துருவங்களாக உள்ள பாஜக மற்றும் சிபிஐ (எம்) ஆகிய கட்சிகள் திருணமூல் காங்கிரஸைத் தோற்கடிக்க மாவட்ட அளவில் கைகோர்த்துள்ளதாகத் தெரிகிறது. நாடியா – கரிம்பூர் பகுதிகளில் ஆளும் திருணமூல் காங்கிரஸை எதிர்த்துப் போட்டியிடுவதற்காக பாஜகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஓரணியில் இணைந்துள்ளன. கடந்த வாரம் ஆளுங்கட்சிக்கு எதிராக நடைபெற்ற பேரணியில் அவ்விரு கட்சிகளும் ஒருசேரப் பங்கேற்றன.

அதன் தொடர்ச்சியாக, பல்வேறு பகுதிகளில் திருணமூல் காங்கிரஸுக்கு நேரடிப் போட்டியை அளிக்க வேண்டும் என்று அக்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இது தொடர்பாக நாடியா மாவட்ட சிபிஐ (எம்) செயலாளர் மற்றும் மாநில கமிட்டி உறுப்பினரான சுமித் டீ பிடிஐ ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், “ஆம், கீழ்மட்ட அளவில் சில சமரசங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பெரும்பாலான பகுதிகளில் நேருக்கு நேர் போட்டி இருக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். அதற்கு மதிப்பளித்து அதற்கேற்றாற்போல் செயல்பட வேண்டும். இது வழக்கமான தொகுதிப் பகிர்வுதான்” என்று கூறியுள்ளார்.

இதேபோன்று பாஜகவின் வடக்கு நாதியா மாவட்டத் தலைவர் மஹாதெப் சர்கர் பிடிஐ ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், “பல்வேறு இடங்களில் எங்கள் கட்சி சார்பில் வேட்பாளர்கள் யாரும் நிறுத்தப்படவில்லை. எனவே, எங்களின் தொண்டர்கள் சுயேச்சை வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அந்த சுயேச்சை வேட்பாளர்களில் பெரும்பாலானோர் சிபிஐ (எம்) தொண்டர்களாக உள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பாஜக – சிபிஐ (எம்) கைகோர்த்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிபிஐ (எம்) தேசியப் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி இதனை மறுத்துள்ளார்.

“இடதுசாரித் தொண்டர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைச் சம்பவத்தை திசை திருப்பும் விதமான திருணமூல் காங்கிரஸ் சார்பில் வதந்திகளும், பொய்களும் பரப்பப்படுகின்றன. பாஜகவுடன் புரிதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவிப்பதுடன் பாஜக மற்றும் திருணமூல் ஆகிய கட்சிகளுக்கு எதிராகவே இருப்போம் என்று தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *