gஇந்தியாவின் அடுத்தகட்ட வளர்ச்சி என்ன?

public

ஹெச்.டி.எஃப்.சி. வங்கியின் தலைவர் தீபக் பரேக், “இந்தியாவின் வளர்ச்சியில் மின்னணு வர்த்தகம், நிதிச் சேவைகள், மொபைல் பேங்கிங் உள்ளிட்டவை முக்கியப் பங்காற்றுகின்றன. ஊரகப் பகுதிகளில் டிஜிட்டல் கல்வியறிவை அதிகரிப்பதும் வளர்ச்சிக்கான கருவியாகும். பண மதிப்பழிப்பு நடவடிக்கையால் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளன. இது அடுத்தகட்ட வளர்ச்சிக்கானவொரு படிக்கல்லாகும். மின்னணு வர்த்தகத்தைப் பொறுத்தவரையில், சீனா தினசரி 5.7 கோடி பேக்கேஜுகளை டெலிவரி செய்கிறது. ஆனால், இந்தியாவிலோ அது 20 லட்சமாக மட்டுமே உள்ளது. இத்துறைக்கான வளர்ச்சியானது லாஜிஸ்டிக் மற்றும் சேமிப்புக் கிடங்குகளின் உள்கட்டமைப்பு ஆகியவற்றைச் சார்ந்தே இருக்கிறது.

5ஜி ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டுக்கு இந்தியா விரைவில் தன்னை ஆயத்தப்படுத்த வேண்டும். செயற்கை நுண்ணறிவு மின்னணு ஆளுமை, வேளாண் சேவைகள், போக்குவரத்து அமைப்புகள் மற்றும் இணையதளச் சேவைகளை மேம்படுத்த வேண்டும். ஆசியாவிலேயே மிகவும் மந்தமான இணையச் சேவை கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. இந்தியாவின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு அடிக்கோலாகத் திகழ்வது தொழில்நுட்பம்தான். உலகின் மிகப்பெரிய 10 நிறுவனங்களை எடுத்துக்கொண்டால் அதில் 6 நிறுவனங்கள் தொழில்நுட்ப நிறுவனங்களாகத்தான் இருக்கின்றன.

இந்தியா சுதந்திரமடைந்து 60 ஆண்டுகளில், 2007ஆம் ஆண்டில் ஒரு லட்சம் கோடி பொருளாதாரமாக உருவெடுத்தது. அடுத்த ஏழு ஆண்டுகளிலேயே 2015இல் இரு மடங்கு வளர்ச்சியை எட்டியது. 2024ஆம் ஆண்டில் வளர்ச்சி இன்னும் அதிகரிக்கும்” என்று கூறியுள்ளார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *