fஅண்ணா நினைவு நாள்: திமுக அமைதிப்பேரணி!

public

அறிஞர் அண்ணாவின் 50ஆவது நினைவு நாளையொட்டி திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதிப்பேரணி நடைபெற்றது.

திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கியவரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதல் முதல்வருமான அண்ணாவின் 50ஆவது நினைவு நாளையொட்டி திமுக சார்பில் சென்னையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த அமைதி ஊர்வலம் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் தொடங்கி அண்ணா நினைவிடத்தில் முடிந்தது. சரியாகக் காலை 7.45 மணிக்குத் தொடங்கிய இந்த அமைதி ஊர்வலத்தில் திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, பொருளாளர் துரைமுருகன், திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஆ.ராசா மற்றும் தயாநிதி மாறன் மற்றும் சென்னை மாவட்டத் திமுக பொறுப்பாளர்கள், தொண்டர்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த அமைதி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.

இதையடுத்து அண்ணா நினைவிடத்தில் ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதன்பிறகு அண்ணா நினைவிடத்துக்குப் பின்னால் உள்ள கருணாநிதி நினைவிடத்துக்கும் சென்று ஸ்டாலின் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். ஒவ்வொரு ஆண்டும் அண்ணாவின் நினைவு நாளில் திமுக சார்பில் அமைதிப்பேரணி நடத்துவது வழக்கம். அதைப்போலவே இந்த ஆண்டும் இந்த அமைதிப்பேரணி நடத்தப்பட்டுள்ளது.

அண்ணா நினைவு நாளை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், “அண்ணா மறைந்து அரை நூற்றாண்டு ஆனாலும், என்றென்றும் மக்கள் நெஞ்சங்களில் நீங்காது நிலைத்துள்ளார். இணையிலா எழுத்தாலும், ஈர்த்திடும் பேச்சாலும், அயராத உழைப்பாலும், ஆளுமையாலும் தமிழ் மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டியவர் அண்ணா. மாநிலங்களின் உரிமைக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தவர். இன்றைய அத்தியாவசியத் தேவை அறிஞர் அண்ணா வகுத்துத் தந்த ஆற்றல் மிகுந்த கொள்கைகள்தான். அண்ணாவையும், அவரது கொள்கைகளையும் நெஞ்சில் ஏந்துவோம்” என்று கூறியுள்ளார்.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *