uதேர்தல் எதிரொலி: பட்டாசு விற்பனைக்குத் தடை!

public

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதியில் வரும் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது, தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

நேற்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. இந்தப் பகுதியில் இருக்கும் வெளியூர் ஆட்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதற்கிடையில் தேர்தலை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் ஆறு நாட்கள் பட்டாசு விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அம்மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் நேற்று (அக்டோபர் 19) வெளியிட்ட அறிவிப்பில், “நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு வரும் 21ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை வரும் 24ஆம் தேதியும் நடைபெறுகிறது. இதனால் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து வெடிபொருள் விற்பனை நிலையங்களையும், வெடிபொருள் கிடங்குகளையும் வரும் 20ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை மூடி வைத்திருக்க அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, இந்த ஆறு நாள்களும் திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்பட்டுவரும் அனைத்து வெடிபொருள் விற்பனை நிலையங்களையும், கிடங்குகளையும் திறந்து வைத்திருக்கவோ, வியாபாரம் செய்யவோ கூடாது” என்று அறிவித்துள்ளார்.

தீபாவளி நெருங்கியுள்ள நிலையில் இந்தத் தடை விதிக்கப்பட்டிருப்பது பட்டாசு விற்பனையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 27ஆம் தேதி தீபாவளி என்ற நிலையில், 25ஆம் தேதி வரை விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 26ஆம் தேதி மட்டுமே விற்பனை நடைபெறும் நிலையில் இதனால் பெரும் நஷ்டம் ஏற்படும் என்று பட்டாசு விற்பனையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். ஏற்கெனவே போதிய உற்பத்தி இல்லாததால் இந்த ஆண்டு பட்டாசின் விலை அதிகரித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. விற்பனை மந்தமாகியிருப்பதாக விற்பனையாளர்கள் கூறும் நிலையில் இந்தத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *