Eவிக்ரமன் மீண்டும் போட்டி!

public

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தல் வரும் ஜூலை 30ஆம் தேதி சென்னை வடபழனியில் உள்ள திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்தில் நடைபெறவுள்ளது. முன்னாள் மாவட்ட நீதிபதி கே.பாலசுப்பிரமணியன் தேர்தல் அதிகாரியாகச் செயல்படுகிறார். இந்த இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் 2,037 பேர் ஓட்டுப்போட உள்ளனர். ‘புது வசந்தம் அணி’, ‘புதிய அலைகள் அணி’ என இரண்டு அணிகள் இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றன.

ஏற்கனவே இருமுறை தலைவர் பதவி வகித்த இயக்குநர் விக்ரமன் ‘புது வசந்தம் அணி’ சார்பில் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார். ஆர்.கே.செல்வமணி பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுகிறார். துணைத்தலைவர்கள் பதவிக்கு இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், ஆர்.வி.உதயகுமார் ஆகிய இருவரும் போட்டியிடுகின்றனர். பொருளாளர் பதவிக்கு இயக்குநர் பேரரசும், இணைச்செயலாளர்கள் பதவிக்கு இயக்குநர்கள் ரமேஷ் கண்ணா, மனோஜ்குமார், ஏ.வெங்கடேஷ், அறிவழகன் ஆகிய நான்கு பேரும் போட்டியிடுகின்றனர்.

‘புதிய அலைகள் அணி’ சார்பில் தலைவர் பதவிக்கும், பொதுச்செயலாளர் பதவிக்கும் யாரும் போட்டியிடவில்லை. துணைத்தலைவர் பதவிக்கு சுப்பிரமணியன் சிவாவும், பொருளாளர் பதவிக்கு ஏ.ஜெகதீசனும் போட்டியிடுகிறார்கள். இணைச்செயலாளர்கள் பதவிக்கு பாலமுரளி வர்மன், ஐந்துகோவிலான், நாகராஜன் மணிகண்டன், ராமகிருஷ்ணன் ஆகிய நான்கு பேரும் போட்டியிடுகின்றனர். காலை 8 மணிக்குத் தொடங்கி, மாலை 5 மணியளவில் முடிவடைந்து, அன்று இரவே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *