dஷர்மிளா தாகூருக்குக் கிடைத்த கௌரவம்!

public

பாலிவுட் நடிகை ஷர்மிளா தாகூருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.

பிரபல வங்காள மொழி திரைப்பட இயக்குநர் சத்யஜித் ரே இயக்கத்தில் 1959ஆம் ஆண்டில் வெளியான ‘அபுர் சன்சார்’ படத்தில் அறிமுகமானவர் நடிகை ஷர்மிளா தாகூர். 1964ஆம் ஆண்டு வெளியான ‘காஷ்மிர் கி காலி’ இந்தி படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகுக்குச் சென்ற ஷர்மிளாவின் நடிப்பில் பின்னர் வெளியான ஆராதனா, மவுசம், அமர் பிரேம் உள்ளிட்ட படங்கள் அவரை உச்ச நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்த்தியது.

டெல்லியில் உள்ள பி.ஹெச்.டி. அமைப்பின் சார்பில் சிரி கோட்டை அரங்கத்தில் (அக்டோபர் 24) அன்று நடைபெற்ற விழாவில் தற்போது 72 வயதாகும் ஷர்மிளா தாகூருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. 1970-களில் மிகவும் பிரபலமாக இருந்த ராஜேஷ் கண்ணா, தர்மேந்திரா உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ள ஷர்மிளா, **சிறந்த நடிகை மற்றும் சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதுகள், ஃபிலிம்பேர் விருதுகள்** உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

பிரபல கிரிக்கெட் வீரரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான மன்சூர் அலி கான் பட்டௌடியை 1969ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்ட ஷர்மிளா தாகூர், இஸ்லாமியரான கணவரின் மதத்தை தழுவி, தனது பெயரை ஆயிஷா சுல்தானா என்று மாற்றிக் கொண்டார். தற்போது 72 வயதாகும் ஷர்மிளாவுக்கு விருது வழங்கும் விழாவில், பிரதமர் அலுவலக இணை மந்திரி ஜிதேந்திரா பிரசாத், டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி ஆகியோர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *