Cஇது டெஸ்ட் இல்லை ரிசல்ட்!

public

ஆஸ்திரேலிய அணியின் தாக்குதலால் நிலைகுலைந்த இந்திய அணி, கொஞ்சமும் மிச்சம் வைக்காமல் ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்க்ஸில் அப்படியே திருப்பிக்கொடுத்தது.

இந்தியாவின் கௌரவமான ஸ்கோருக்குக் காரணமான புஜாரா, முதல் நாள் ஆட்டம் முடிந்ததும் கொடுத்த பேட்டியில் “ஆடுகளத்தில் புல் அதிகமாக இருப்பதால் பந்து லாவகமாகத் திரும்புகிறது. பேட்ஸ்மேன்கள் அடிக்கும் பந்தும் எதிர்பார்க்கும் அளவுக்கு வேகமாகச் செல்வதில்லை என்பதை உணர்ந்தேன். இதைப் பற்றி அணியின் பவுலர்களிடம் கலந்தாலோசித்து ஆஸ்திரேலியாவுக்கு கடினமான ஒரு சூழலை உருவாக்குவோம்” என்று கூறியிருந்தார். ஆட்டம் முடிந்ததும் வழக்கமாகப் பேசப்படும் வார்த்தைகளில் ஒன்றாக இல்லாமல், உடை மாற்றும் அறையில் அடிலெய்டு ஆடுகளம் குறித்து நடைபெற்ற உரையாடல்களின் பலனாகவே ஆஸ்திரேலியாவின் தற்போதைய நிலையைப் பார்க்க வேண்டியதிருக்கிறது.

இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஹாரிஸ்-கவாஜா ஜோடி இருபது ஓவர்களையும் தாண்டி நிலைத்து நின்றதும் ஆஸ்திரேலிய அணியின் பழைய ஆட்டங்களெல்லாம் ரசிகர்களுக்கு நினைவில் வந்துபோயிருக்கும். ஆனால், அந்தக் கூட்டணியை உடைத்ததுடன், அடுத்தடுத்த விக்கெட்டுகளையும் அஸ்வின் – பும்ரா ஜோடி எடுத்தது.

இந்தியாவின் தாக்குதலைச் சமாளிக்கவே ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு நேரம் சரியாக இருந்ததே தவிர, ஆட்டத்தினைத் தம் கட்டுக்குள் கொண்டுவருவதற்கான பொறுமைக்கு அங்கு நேரம் கொடுக்கப்படவில்லை.

இந்தியாவின் முதல் இன்னிங்க்ஸில் எக்ஸ்ட்ரா ரன்னாக ஒரே ஒரு ரன் மட்டுமே எடுக்கப்பட்டது. ஆனால், ஆஸ்திரேலிய அணியோ 17 எக்ஸ்ட்ரா ரன்களை எடுத்தது. வீசப்படும் பந்தினை கணிக்க முடியாமல், காலில் தடுத்தும், பந்து பேட்ஸ்மேன் மற்றும் கீப்பரை ஏமாற்றியும் சென்றதிலேயே 15 ரன்களை ஆஸ்திரேலியா எடுத்திருந்தது. அப்படியும் பேட்ஸ்மேன்கள் அடிக்கும் பந்தினை, அதிக நெருக்கமாக நிற்காமல் கொஞ்சம் தூரமாகவே நின்றிருந்த ஃபீல்டர்கள் தடுத்துவிட முழு நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் எகனாமி 3 ரன்களுக்குள்ளாக சுருக்கப்பட்டது.

33 ஓவர்கள் வீசிய அஸ்வின் 9 ஓவர்களை மெய்டென் செய்து, ஒரு ஓவருக்கு ஒன்றரை ரன்களை மட்டுமே கொடுத்து ஆஸ்திரேலியாவைக் கட்டுப்படுத்திருந்தார். பும்ரா, இஷாந்த் ஆகியோரும் இரண்டு ரன்களில் தங்களது எகனாமியைப் பார்த்துக்கொள்ள ஆஸ்திரேலியாவின் ஆட்டம் கட்டுக்குள் வைக்கப்பட்டது. எப்போது ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் அடிப்பார்கள், ஆட்டம் அடுத்த கட்டத்துக்குச் செல்லும் என ஒருவித பரபரப்புடனே ஆட்டம் முழுவதும் நடைபெற்றது.

டெஸ்ட் போட்டிகளுக்கே உரிய தனித்துவத்துக்கும் மேலாக, ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் காணப்படும் பரபரப்பைக் கொடுத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டின் வசீகரத்தை வெளிக்காட்டியது இந்திய அணி. அதிரடியாக ரன் குவிக்கும்போது மட்டுமல்ல, மட்டையாளரைத் திணறச்செய்யும் பந்து வீச்சும் சுவாரஸ்யத்தைத் தரும் என்பதை நிரூபித்துள்ளன இந்த டெஸ்டின் முதல் இரு நாள் ஆட்டங்கள்.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *