Bவிக்ரம் பெயரில் போலிகள்!

public

நடிகர் விக்ரம் பெயரில் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூகவலைதளங்களில் இருக்கும் கணக்குகள் போலியானவை என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சமூக வலைதளங்கள் மூலமாக ஒரு சில நன்மைகள் இருந்தாலும், அதனால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பாமரன் முதல் பணக்காரர்கள் என அனைவரையுமே ஒரு உலுக்கு உலுக்கிவிடுகிறது இந்த சமூக வலைதளங்கள். இது சாதாரண ஒரு நபருக்கு நிகழ்ந்தால் அதை எளிதில் கடந்து சென்றுவிடுகின்றனர். ஆனால் பிரபலங்களாக இருப்பவர்களுக்கு இது ஒரு பெரும் பிரச்சினையாகவே அமைந்துவிடுகிறது.

நடிகர் விக்ரமிற்கு ட்விட்டரில் அக்கவுண்ட் இல்லை. அவருக்கு அதிகாரபூர்வமான அக்கவுண்ட் இன்ஸ்டாகிராமில் மட்டுமே இருக்கிறது. ஆனால் விக்ரம் பெயரில் ட்விட்டரில் பல பக்கங்களில் அவர் பதிவிடுவது போல் பதிவிட்டு வருகிறார்கள். இதனால் நடிகர் விக்ரம் பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் அக்கவுண்ட் இல்லை என்பதை அவரது மக்கள் தொடர்பாளர் நேற்று அறிவித்துள்ளார்.

தற்போது விக்ரம் ஹரி இயக்கத்தில் சாமி ஸ்கொயர் படத்தில் நடித்துவருகிறார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *