சென்னையில் மின்சார ரயில் சேவை பாதிப்பு!

public

சென்னை மற்றும் புறநகர் மக்களின் இதயமாக இருந்து வரும் மின்சார ரெயில் அன்றாட வாழ்வின் அங்கமாக திகழ்ந்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் புறநகர் ரயில் சேவை இன்று கடுமையாக பாதித்தது. கடற்கரை – தாம்பரம் இடையேயான மின்சார ரயில்கள் இன்று காலையில் முறையான அட்டவணைப்படி இயக்க முடியவில்லை. சிக்னலில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் ரயில்கள் குறித்த நேரத்திலும், வேகத்திலும் இயக்க முடியவில்லை.

மழையால் திடீரென சிக்னல் இயங்காததால் மின்சார ரயில்கள் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டது. காலை 7 மணி முதல் 8.30 மணிவரை இந்த பாதிப்பு இருந்தது. பின்னர் சிக்னல் கோளாறு சரி செய்யப்பட்டது. இதேபோல வில்லிவாக்கம் ரயில் நிலையம் அருகே உயர் அழுத்த மின்பாதை அறுந்து விழுந்தது. இதனால் சென்ட்ரல் – திருவள்ளூர் இடையே சேவை கடுமையாக பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் காலையில் வேலைக்கு சென்றவர்கள் பாதிக்கப்பட்டனர்.

புறநகர் பகுதியில் இருந்து வேலைக்கு வரக்கூடிய மக்கள் அவதிப்பட்டனர். ரயில்களை தொடர்ந்து அந்த பாதையில் இயக்க முடியாததால் எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்லக்கூடிய பாதையில் மாற்றி இயக்கப்பட்டன. நீண்ட நேரம் மின்சார ரயில்கள் ஓடாமல் நின்றதால் ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்தது. நீண்ட நேரம் மின்சார ரயில்கள் ஓடாமல் நின்றதால் பெரும்பாலான பயணிகள் நெரிசலில் பயணம் செய்தனர்.

மின்சார ரயில் சேவை பாதிப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கத்திலும் பாதிப்பை ஏற்படுத்தின. சென்ட்ரலில் இருந்து புறப்பட வேண்டிய ரயில்கள் சிறிது நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றன. இதற்கிடையே அறுந்து விழுந்த மின் வயரை சீரமைக்கும் பணி ரயில்வே ஊழியர்கள் மூலம் விரைவு படுத்தப்பட்டது. அதனை சரி செய்த பின்னர் வழக்கம் போல் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன. இதனால் 2 மணிநேரம் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *