மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 ஜன 2018

ஸ்டாலினுக்குப் பரந்த மனப்பான்மை வேண்டும்!

ஸ்டாலினுக்குப் பரந்த மனப்பான்மை வேண்டும்!

‘எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பரந்த மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும்’ என்று தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு கடந்த 19ஆம் தேதி நிதி பற்றாக்குறை காரணமாக பேருந்து கட்டணங்களை உயர்த்துவதாக அறிவித்தது. பேருந்து கட்டணம் இரண்டு மடங்காக உயர்த்தபட்டநிலையில் தமிழகம் முழுவதும் அதற்கெதிரான போராட்டங்கள் நடந்து வருகின்றன. பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக சார்பாக நேற்று (ஜனவரி 27) கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், “தமிழக அரசு பேருந்து கட்டண உயர்வைத் திரும்ப பெறவில்லை என்றால் நாளை மறுநாள் முதல் திமுக சார்பில் அனுமதி இல்லாத போராட்டம் நடைபெறும்” என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று (ஜனவரி 28) செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், “ஏழு வருடங்களாக தமிழக அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்தவில்லை. இந்த ஏழு வருடத்தில் தொழிலாளர் சம்பள உயர்வு ஏற்பட்டிருக்கிறது. டீசல் விலை உயர்ந்துள்ளது, நிர்வாக செலவு உயர்ந்துள்ளது இந்தக் காரணங்களை முன்னிட்டு தான் பேருந்து கட்டணத்தை உயர்த்தினோம். மிகுந்த மன அழுத்தத்துடன் மகிழ்ச்சி இல்லாமல்தான் அறிவித்தோம்” என்றார்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

ஞாயிறு 28 ஜன 2018