விழுப்புரம் மாவட்டம் சின்ன சேலத்தில் மாணவிகள் தொடர்ந்து 28 மணி நேரம் பரதநாட்டியம் ஆடி, ‘இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ சாதனைப் படைத்துள்ளனர். சின்ன சேலம் அருகே உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் பால சரஸ்வதி கலைக்கூடத்தினர் பரதநாட்டிய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
இதில் தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள நாட்டிய பள்ளிகளைச் சேர்ந்த 282 மாணவிகள் கலந்துகொண்டனர். மாணவிகள் குழுவாகப் பிரிந்து தொடர்ந்து 28 மணி நேரம் பரதம் ஆடினர். இந்தச் சாதனை, இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக 24 மணி நேரம் பரத நாட்டிய நிகழ்ச்சி சாதனையாக இருந்த நிலையில் தற்போது 28 மணி நேரம் பரதம் ஆடி அந்தச் சாதனை முறியடிக்கப்பட்டது.�,
+1
+1
+1
+1
+1
+1
+1